Mehndi fro
சரும பராமரிப்பு

மருதாணியை நீக்குவதற்கான இயற்கை வழிகள்!பெண்களே தெரிஞ்சிக்கங்க…

 

கைகளுக்கு மருதாணி இலையைக் கொண்டு சிம்பிளாகத் தான் டிசைன்களை வைக்க முடியும். ஆனால் கடைகளில் விற்கப்படும் மெஹந்தியைக் கொண்டு, பல டிசைன்களைப் போடலாம். அப்படி போடப்படும் மெஹந்தி சில நாட்கள் கழித்து மங்கத் தொடங்கும். அந்நேரம் அது அசிங்கமாக இருக்கும். அப்படி மங்கத் தொடங்கும் போது பலருக்கு அதன் தோற்றம் பிடிப்பதில்லை.

வருத்தம் கொள்ள வேண்டாம், மங்கத் தொடங்கும் மருதாணியை பாதுகாப்பாகவும், வேகமாகவும் நீக்குவதற்கான வழிகளைத் தான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம். பொதுவாக உங்கள் முகத்திற்கு பயன்படுத்தும் நல்ல தரமான ப்ளீச்சை, மருதாணி போடப்பட்ட இடங்களில் போடவும்.

அது காய்ந்தவுடன் குளிர்ந்த நீரை கொண்டு கழுவவும். எலுமிச்சையை பேக்கிங் சோடாவுடன் கலந்து அடர்த்தியான பேஸ்ட் ஒன்றை தயார் செய்துக் கொள்ளுங்கள். அதனை மருதாணி பூசப்பட்ட இடங்களின் மீது தடவிக் கொள்ளவும். அது காய்ந்தவுடன் குளிர்ந்த நீரில் கழுவி விடுங்கள். இது உங்கள் கைகளை வறட்சியடைய செய்யும்.

அதனால் ஈரப்பதத்தையும் உண்டாக்கிக் கொள் ளுங்கள். டூத் பேஸ்ட்டில் உள்ள சில குணங்கள் மரு தாணியை வேகமாக போக்கி விடும். அதற்கு டூத் பேஸ்ட்டை எடுத்து, அதனை மருதாணி போடப்பட்ட இடங்களில் தடவவும். அது காய்ந்த பிறகு, மருதாணியின் நிறம் வேகமாக மறைய கைகளை ஒன்றாக வைத்து நன்றாக தேய்க்கவும்.

அடிக்கடி கைகளை கழுவுங்கள். அதுவும் ஒரு நாளைக்கு 10-12 முறைகள் வரை கழுவவும். மருதாணியை மறைய வைக்க சோப்பு உதவும். ஆனால் அளவுக்கு அதிகமான முறையில் கழுவினால், கைகள் வறண்டு போகும்.

அதனால் கைகளை கழுவும் ஒவ்வொரு முறையும் நல்ல தொரு மாய்ஸ்சரைசர் ஒன்றை பயன்படுத்துங்கள். ஆலிவ் எண்ணெய் என்பது இயற்கையான கூழாக்கியாக செயல் படுவதால், மருதாணியின் நிறத்தை நீக்கும் மென்மையான வழியாக இது கருதப்படுகிறது.

ஆலிவ் எண்ணெயுடன் கொஞ்சம் உப்பை கலந்து, அதனை உங்கள் சருமத்தின் மீது தடவவும்.

10 நிமிடங்கள் கழித்து, இந்த செயல் முறையை சில முறை மீண்டும் செய்திடவும். இதனை சில காலம் பின் பற்றினால் நல்ல பலன் கிடைக்கும்.

வெது வெதுப்பான நீரில் உப்பை கலந்து, அதனுள் உங்கள் கைகள் மற்றும் பாதங்களை 20 நிமிடங்கள் வரை அல்லது தண்ணீர் குளிரும் வரை ஊற வைக்கவும். மாற்றத்தை காண வேண்டுமானால், இந்த செயல் முறையை சில முறை தொடர்ந்து செய்திட வேண்டும்.கைகளை நீண்ட நேரம் ஊற வைக்கும் போது கைகள் வறண்டு போகலாம். அதனால் நல்லதொரு மாய்ஸ் சரைசரைப் பயன் படுத்துங்கள். மருதாணியை மங்க வைக்க குளோரின் உதவும். உங்கள் வீட்டில் குளோரின் தண்ணீரில் கைகளையும் கால்களையும் ஊற வைத்தாலே போதுமானது.- source: maalaimalar

Related posts

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் C மற்றும் ஆண்டிஆக்ஸைட் அதிகளவு உள்ளதால் இவற்றின் தோலை முக அழகிற்கு பயன்படுத்தும் போது சருமம் பொலிவுடனும், வெண்மையாகவும் காணப்படும்.

nathan

சருமத்தை காக்கும் உணவுகள்

nathan

ஆயுள் முழுக்க இளமையோடு ஜொலிக்க உதவும் அமிர்தப்பொடி… வீட்டில் எப்படி தயாரிப்பது..?இத படிங்க!

nathan

சூப்பர் டிப்ஸ்.. சருமத்தை பளபளப்பாக வைக்க உதவும் சிட்ரஸ் பழங்கள்!

nathan

முகத்தில் பருக்களால் ஏற்பட்ட வடுக்கள் மாறாத தழும்பாக இருந்தால், ஆரஞ்சு தோலை இவ்வாறு பயன்படத்துங்கள்!…

sangika

பனிக்காலத்தில் ஆரோக்கியமும் அழகும்

nathan

முதிர்ந்த வயதிலும் உங்கள் சருமத்தை இளமையுடன் தோன்ற வைக்கலாம்’ என்கிறார் சரும நிபுணர்

nathan

ரோசாசியா என்றால் என்ன?

sangika

சருமத்தை பளபளப்பாக்கும் ஆரஞ்சுத் தோல் டீ

nathan