கால்கள் பராமரிப்பு

காலணிகளை தேர்வு செய்யும் போது கவனிக்க வேண்டியவை

b193dd83 50ba 4734 a515 7d18a4ab6040 S secvpf
அழகான பாதங்களை, மேலும் அழகாக காட்டுவது காலணிகள். இதில் பல வகை உள்ளன. பிளாட், ஹீல்ஸ், ஹைஹீல்ஸ், பாய்ன்டெட் ஹீல்ஸ் மற்றும் பேன்சி காலணிகள். காலணிகள் எதுவாக இருந்தாலும் அதை நமக்கு ஏற்ப வாங்கி அணியவேண்டும். நம் கால்கள் தரையில் சமமாக இருக்க வேண்டும்.

இதில் கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டாலும் உச்சி முதல் உள்ளங்கால் வரை உடல் பல மாற்றங்களை சந்திக்கிறது. சாதாரண காலணிகள் அணிவதால் நம் உடலில் எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால், ஹைஹீல்ஸ் மற்றும் பாய்ன்டெட் ஹீல்ஸ் அணியும் போது நம் உடலின் சமநிலையில் மாற்றம் ஏற்படுகிறது. காரணம், ஹீல்ஸ் அணியும் போது குதிக்கால்கள் மேலே எழும்பி இருக்கும். இதனால் பின்புறம் சற்று மேல் தூக்கி இருக்கும். அதை சமாளிக்க நம்மை அறியாமல் நாம் முன்னால் குனிவோம்.

இதனால் பின்புறம் மற்றும் மார்பக பகுதியில் மாற்றம் ஏற்படும். ஹைஹீல்ஸ் காலணிகள் அணிவதால், பல பிரச்சனைகள் ஏற்படும். அதில் முக்கியமானது கால் முட்டிகளில் அழுத்தம். விளைவு மூட்டுவலி மற்றும் தேய்மானம். குதிக்கால் ஹீல்ஸ் அணிவதால், உடம்பின் மொத்த எடை கால் விரல்களில் விழும். இதனால் அங்குள்ள நரம்புகளில் அழுத்தம் ஏற்பட்டு வீக்கம் ஏற்படும். நம் உடலை நேராக தாங்கிப் பிடிக்கும் தண்டுவடத்தில் பாதிப்பு ஏற்பட்டு தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம், தலைவலி போன்ற பிரச்னைகளும் ஏற்படும்.

பிரச்சனைகளில் இருந்தும் விடுபட ஒரே தீர்வு பெரிய ஹீல்ஸ் உள்ள காலணிகளை தவிர்த்து விட்டு சாதாரண மிருதுவான காலணிகள் அணிவது தான் சிறந்தது. அதே சமயம் ஹீல்ஸ் கொண்ட காலணிகளை அணிய விரும்பினால், கல்யாணம் மற்றும் பார்ட்டிகளுக்கு மட்டும் அணிந்து செல்லலாம்”

உடல் எடையை குறைக்க தினமும் நடைப்பயிற்சி செய்பவர்கள் சாதாரண கான்வாஸ் ஷு அல்லது எடை குறைவான ஷுக்களை அணியலாம். வெறும் கால்களிலோ அல்லது செருப்பு அணிந்து கொண்டோ நடைப்பயிற்சி செய்யக்கூடாது. அதிக நேரம் நின்றுக் கொண்டு வேலை பார்ப்பவர்கள் பதினைந்து நிமிடங்களுக்கு ஒருமுறை சிறிது நேரம் அமர்ந்து விட்டு வேலையை தொடரலாம்.

கர்ப்பிணிகள் ஹைஹீல்ஸ் காலணிகள் ஒருபோதும் அணியக் கூடாது. கால் பாதங்களில் வலி இருந்தால், கால்களை நீட்டி பாதங்களை இடது மற்றும் வலது புறமாக சுழற்றலாம். மேலும் கீழுமாக அசைக்கலாம். இதனால் கால் மற்றும் கால் விரல்களில் உள்ள வலிகள் குறையும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button