மருத்துவ குறிப்பு

உடல் பிணி போக்கும் வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்

வாழை மரத்தின் அனைத்து பகுதிகளும் பயனுள்ளவையே. வாழைப்பழம் முதல், வாழை இலை , வாழைத்தண்டு, வாழைப்பூ போன்ற அனைத்தும் பயனுள்ளவையே. இதில் வாழைப்பூ மிகச்சிறந்த மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. அவை வருமாறு:-

1. வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால், ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றி விடும். இதனால் ரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, ரத்த ஓட்டம் சீராக செல்லும்.

2. வாழைப்பூவை சமைத்து சாப்பிட்டால், ரத்தமானது ஆக்ஸிஜனையும், தேவையான இரும்பு சத்தையும் உட்கிரகிப்பதுடன், ரத்த அழுத்தம், ரத்த சோகை போன்ற நோய்கள் ஏற்படாமல் காக்கும்.

3.ரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரைப் பொருளைக் கரைத்து வெளியேற்ற, வாழைப்பூவின் துவர்ப்புத்தன்மை உதவுகிறது. இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைகிறது.
64fb17e2 3642 4f32 84d1 01581b684098 S secvpf
4. இன்றைய உணவுமுறை மாறுபாட்டாலும், மன உளைச்சலாலும் வயிற்றில் செரியாமை உண்டாகி, அதனால் வாயு சீற்றம் கொண்டு வயிற்றில் புண்களை ஏற்படுத்துகிறது. இந்த புண்களை ஆற்றும் வல்லமை, வாழைப் பூவுக்கு உண்டு. செரிமானத்தன்மை அதிகரிக்கும்.

5. மூலநோயின் பாதிப்பினால் மலத்துடன் ரத்தம் வெளியேறுதலை தடுக்கும். உள்மூலம், வெளிமூலப் புண்களுக்கு சிறந்த மருந்தாக வாழைப் பூவைப் பயன்படுத்தலாம். மூலக்கடுப்பு, ரத்த மூலம் போன்றவற்றைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது.

6.மலச்சிக்கலைப் போக்கும், சீதபேதியையும் கட்டுப்படுத்தும். வாய்ப் புண்ணைப் போக்கி வாய் நாற்றத்தையும் நீக்கும்.

7. பெண்களுக்கு உண்டாகும் கருப்பைக் கோளாறுகள். மாதவிலக்கு காலங்களில் அதிக ரத்தப்போக்கு, அல்லது ரத்த போக்கின்மை, வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கு வாழைப்பூவை உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால் குணம் கிடைக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button