மருத்துவ குறிப்பு

தினமும் ‘கக்கா’ போகும் போது கஷ்டப்படுறீங்களா?இந்த கைவைத்தியங்கள் சூப்பரா பலன் தரும்!!

தற்போது பெரும்பாலான மக்கள் அன்றாடம் அவதிப்படும் ஓர் பிரச்சனை தான் மலச்சிக்கல். சமீபத்திய சர்வேயின் படி, இன்றைய காலகட்டத்தில் சுமார் 22 சதவீத இந்தியர்கள் மலச்சிக்கலால் கஷ்டப்படுகிறார்கள். ஆயுர்வேதத்தின் படி, மலச்சிக்கலானது குளிர் மற்றும் வறண்ட குணங்கள் பெருங்குடலை சீர்குலைத்து, அதன் சரியான செயல்பாட்டை தடுக்கும் போது ஏற்படுகிறது. ஒருவர் உடலில் சேரும் கழிவுகளை தினமும் வெளியேற்றாத போது, அன்றைய நாள் மிகவும் அமைதியற்றதாகவும், சில சமயங்களில் வலிமிகுந்ததாகவும் இருக்கும். இதற்கு நமது தற்போதைய நவீன வாழ்க்கை முறையே முக்கிய காரணம்.

Effective Remedies For Constipation Suggested By Ayurveda
ஜங்க் உணவுகள், மது அருந்துதல், புகைப்பிடித்தல் மற்றும் அதிகமாக உணவு உண்ணுதல் போன்றவை இப்பிரச்சனைக்கான சில பொதுவான காரணங்களாகும். இப்பிரச்சனையால் பாதிக்கப்படும் பெரும்பாலான மக்கள் வயிற்று உப்புசம் மற்றும் மலத்தை எளிதில் வெளியேற்ற முடியாமையால் கவலைப்படுகிறார்கள். குடல் இயக்கத்தை சீராக வைத்துக் கொள்ள சீரான உணவை உண்ண வேண்டும் மற்றும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். கீழே மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விரைவில் விடுபட ஆயுர்வேதம் கூறும் சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

வாத தோஷத்தை சரிசெய்யும் டயட்

மலச்சிக்கலைத் தடுக்க சிறந்த வழிகளுள் ஒன்று வாத சமநிலை உணவைப் பின்பற்றுவது தான். அதற்கு குளிர்ச்சியான உணவுகள் மற்றும் பானங்கள், உலர் பழங்கள், சாலட்டுகள் மற்றும் பீன்ஸ் ஆகியவற்றிலிருந்து விலகி இருங்கள். மாறாக வெதுவெதுப்பான உணவுகள், பானங்கள் மற்றும் நன்கு சமைத்த காய்கறிகளை அதிகம் சாப்பிடுங்கள்.

திரிபலா நல்ல தீர்வை தரும்

மலச்சிக்கலில் இருந்து தீர்வு தரும் மிகவும் நம்பகமான மற்றும் மிகவும் பயனுள்ள ஓர் பொருள் தான் திரிபலா. அதற்கு திரிபலா டீ குடிக்கலாம் அல்லது கால் டீஸ்ஸ்பூன் திரிபலா பொடியுடன், அரை டீஸ்ஸ்பூன் மல்லி விதை மற்றும் கால் டீஸ்ஸ்பூன் ஏலக்காய் விதை ஆகியவற்றை எடுத்து நன்கு அரைத்து, ஒரு நாளைக்கு இரண்டு முறை சாப்பிடுங்கள். திரிபலாவில் மலமிளக்கி பண்புகளைக் கொண்ட கிளைகோசைடு உள்ளது. ஏலக்காய் மற்றும் மல்லி விதைகள் வாய்வு மற்றும் அஜீரணத்தைப் போக்க உதவுகிறது.

பால் மற்றும் நெய்

ஒன்று அல்லது இரண்டு டீஸ்பூன் நெய்யை ஒரு கப் சூடான பாலில் சேர்த்து இரவு தூங்கும் முன் குடிப்பது, மலச்சிக்கலைப் போக்கும் ஒரு பயனுள்ள மற்றும் மென்மையான வழிமுறையாகும். இது குறிப்பாக வாத மற்றும் பித்த அமைப்புகளுக்கு மிகவும் நல்லது.

பேல் பழத்தின் விழுது

அரை கப் பேல் பழத்தின் விழுதுடன், ஒரு டீஸ்பூன் வெல்லத்தை சேர்த்து கலந்து, தினமும் மாலை வேளையில் உட்கொள்வது, மலச்சிக்கல் பிரச்சனையைப் போக்கும். வேண்டுமானால் புளி தண்ணீர் மற்றும் வெல்லத்தை சேர்த்து பேல் சர்பத் தயாரித்தும் குடிக்கலாம்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

அதிமதுர வேர்

ஒரு டீஸ்பூன் அதிமதுர வேர் பொடியை எடுத்துக் கொள்ளுங்கள். அத்துடன் ஒரு டீஸ்பூன் வெல்லத்தை சேர்த்து, ஒரு கப் வெதுவெதுப்பான நீரை ஊற்றி நன்கு கலந்து குடியுங்கள். அதிமதுரம் குடல் செயல்பாட்டை ஊக்குவிக்க அறியப்படும் ஓர் பொருள். இருப்பினும், இதை உட்கொள்ளும் முன் ஆயுர்வேத நிபுணரை அணுகுவது நல்லது.

வறுத்த சோம்பு

ஒரு டீஸ்பூன் வறுத்த சோம்பை இரவு தூங்கும் முன் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீருடன் சேர்த்து எடுத்துக் கொண்டால், அது மலமிளக்கியாக செயல்படும். சோம்பில் உள்ள எண்ணெய்கள் இரைப்பை நொதிகளின் உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூலம், செரிமானத்தை சிறப்பாக தொடங்க உதவும்.

அத்திப்பழம்

அத்திப்பழத்தை வெதுவெதுப்பான நீரில் ஊற வைத்து சாப்பிடுவது, மலச்சிக்கலுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது. குறிப்பாக குழந்தைகளுக்கு இது நல்ல பலனைத் தரும். அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், தினமும் ஒரு அத்திப்பழத்தை சாப்பிட்டால், செரிமானம் சிறப்பாக இருக்கும் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையும் தடுக்கப்படும்.

அகர்-அகர்/உலர்ந்த கடல்பாசி

சீனா புல் அல்லது அகர்-அகர் என்பது ஒரு உலர்ந்த கடல்பாசி ஆகும். இதை துண்டுகளாக வெட்டி, பாலில் போட்டு கொதிக்க வைக்கும் போது, அது ஜெல் போன்று மாறும். இத்துடன் தேன் சேர்த்து உட்கொண்டு வர மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button