33.3 C
Chennai
Saturday, May 18, 2024
acne
மருத்துவ குறிப்பு

காயத்தால் ஏற்படும் தழும்புகள் மறைய இயற்கை மருத்துவம் -தெரிந்துகொள்வோமா?

நிறைய பெண்கள் வேலை செய்யும் போது, இந்த மாதிரியான தழும்புகளைப் பெறுவார்கள். அதிலும் சமைக்கும் போது சூடான எண்ணெய் படுவது, துணியை இஸ்திரி போடும் போது சூடு வைத்துக் கொள்வது போன்றவற்றால் தான் தழும்புகளைப் பெறுகிறார்கள். இத்தகைய தழும்புகளை நன்கு தெளிவாக தெரியும்.

இதனை போக்க எத்தனை க்ரீம்கள் கடைகளில் விற்றாலும், அதைப் பயன்படுத்தினால், எந்த ஒரு பலனும் இருக்காது. ஆனால் அத்தகைய தழும்புகளைப் போக்க சில இயற்கை முறைகள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தினால், தெளிவாக தெரியும் தழும்புகளை சற்று மங்க வைப்பதோடு, மறையவும் வைக்கலாம்.

சிட்ரஸ் பழங்கள் தீக்காயங்களை நீக்குவதற்கு ஒரு சிறந்த பொருள். அதிலும் எலுமிச்சை சாறு மிகவும் சூப்பரானது. அதற்கு எலுமிச்சை சாற்றை தினமும் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் தடவி, 2 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும்.

முக்கியமாக எலுமிச்சை சாற்றை தீக்காயம் நன்கு காய்ந்தப் பின்னர் தடவ வேண்டும்.

தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உள்ள தழும்புகளை நீக்க, பாதாம் அல்லது ஆலிவ் ஆயிலை தடவி மசாஜ் செய்ய வேண்டும். அதிலும் ஒரு நாளைக்கு இரு முறை தடவி வந்தால், நன்கு பளிச்சென்று தெரியும் தழும்புகள் மங்கிவிடும்.

கற்றாழையில் உள்ள ஜெல்லானது மிகவும் சிறந்த ஒரு பொருள். அந்த ஜெல்லை தழும்புகள் உள்ள இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால், தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உள்ள தழும்பானது மறைய ஆரம்பிக்கும்.

அதுமட்டுமின்றி, சருமமும் மென்மையாகும்.

தினமும் குளிக்கும் முன்பு, பாலை தழும்புகள் உள்ள இடத்தில் தடவி, மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வைத்து குளிக்க வேண்டும். வேண்டுமெனில் அதில் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டும் செய்யலாம்.

ஆலிவ் ஆயில் பல நன்மைகளை உள்ளடக்கியது. அத்தகைய ஆலிவ் ஆயில் தழும்புகளை நீக்கவும் பயன்படுகிறது. எனவே இந்த ஆயிலை தீக்காயம் ஏற்பட்ட இடத்தில், தினமும் காலையும், மாலையும் தடவி மசாஜ் செய்து வந்தால, ஆலிவ் ஆயிலில் உள்ள பொருளானது தழும்புகளை மறைய வைக்கும்.

தக்காளியில் அதிகமான வைட்டமின்கள் இருப்பதால், அவை சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, தழும்புகளை மறைய வைக்கும். அதற்கு தக்காளி துண்டுகளை வெட்டிவோ அல்லது அதன் சாற்றையோ பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி, தினமும் மசாஜ் செய்து வந்தால், தழும்புகள் போய்விடும்.

டீ வகைகளில் ஒன்றான சீமைச்சாமந்தி ஃப்ளேவரில் விற்கப்படும் டீயை போட்டப் பின்பு, அதன் இலைகளை, தழும்பு உள்ள இடத்தில் வைத்து மசாஜ் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவி வந்தால், தழும்புகள் மறைந்துவிடும்.

Related posts

விபரீத விளையாட்டு ஆபத்தை ஏற்படுத்தும்

nathan

உடலில் கொலஸ்ட்ரால் குறைய நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் இவைதான்!!

nathan

பல் கூச்சத்தால் அவதிப்படுகிறீர்களா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

அபார்ஷனிலேயே இத்தனை வகைகள் உள்ளதா?உஷாரா இருங்க…!

nathan

எலுமிச்சை சாறு

nathan

மலேரியாவை கட்டுப்படுத்தும் மர சூரிய காந்தி

nathan

மார்பகத்தின் அளவிற்கும் தாய்பால் சுரப்பிற்கும் தொடர்பு உண்டா?

nathan

சிறந்த தனி மூலிகையின் பயன்பாடுகள் ..சிறந்தவை -பாகம் -3

nathan

இதய நோயை கட்டுப்படுத்தும் பாதாம்

nathan