சரும பராமரிப்பு

மூன்றே மாதத்தில் சரும கருமையை போக்கும் ஃபேஸ் பேக்

உங்களுக்கு விரைவில் வெள்ளையாக ஆசை இருந்தால், இந்த ஃபேஸ் மாஸ்க்குகளைப் போடுங்கள். இந்த ஃபேஸ் மாஸ்க்குகளை அடிக்கடி போட்டு வந்தால் மூன்றே மாதத்தில் உங்கள் சருமத்தில் உள்ள கருமை நீங்கி, சருமத்தின் நிறம் அதிகரித்திருப்பதைக் காண்பீர்கள்.

* 1 டீஸ்பூன் தயிரை நன்கு அடித்துக் கொண்டு, அதில் 3 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ, சருமத்தில் உள்ள கருமை நீங்குவதுடன், பிம்பிள் மற்றும் அதனால் ஏற்பட்ட தழும்புகள் இருந்தாலும் நீங்கும்.

* 1 டீஸ்பூன் பால் பவுடரில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ, கரும்புள்ளிகள் நீங்குவதுடன், வெயிலால் ஏற்பட்ட கருமையும் அகலும். இதை கை, கால்களுக்கும் போடலாம்.

* 1 டீஸ்பூன் கடலை மாவை எடுத்துக் கொண்டு, அதில் சிறிது உருளைக்கிழங்கு சாற்றினை ஊற்றி பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இதனால் உருளைக்கிழங்கில் உள்ள ப்ளீச்சிங் தன்மை சரும கருமையை அகற்றும்.

* அரைத்த தக்காளி மற்றும் தயிரை சரிசம அளவில் எடுத்து ஒன்றாக கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ, தயிர் மற்றும் தக்காளியில் உள்ள அமிலம் சரும கருமைகளை அகற்றும் மற்றும் நல்ல மாய்ஸ்சுரைசராகவும் இருக்கும்.

* சிறிது பாதாமை நீரில் ஊற வைத்து அரைத்து, அதில் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி நன்கு 30 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ சருமத்தின் நிறம் அதிகரிப்பதோடு, முகப்பரு தழும்புகளும் நீங்கும். இந்த முறையை தினமும் செய்து வந்தால் மூன்றே மாதத்தில் சரும நிறம் அதிகரித்திருப்பதைக் காணலாம்.

* 1 டீஸ்பூன் மில்க் க்ரீம்மில் சிறிது கடலை மாவு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இதனால் சரும வறட்சி தடுக்கப்படுவதோடு, சரும நிறமும் மேம்படும்.

aa7ca2e5 af42 4b99 bea3 8c29a98e8897 S secvpf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button