gold ring in ring
Other News

தங்க மோதிரம் அணிவதால் இந்த ராசிக்கு இவ்வளவு அதிர்ஷ்டம் இருக்கா?தெரிஞ்சிக்கங்க…

ஜோதிட சாஸ்திரத்தின் படி தங்கம் அணிவது பல ராசிகளுக்கு பலவிதமான நன்மைகளை கொடுக்கிறது. அந்த வகையில், ஜோதிட சாஸ்திரப்படி தங்கம் அணிவது எப்படி அதிர்ஷ்டம், எந்தெந்த ராசிகளுக்கு அது அதிக அதிர்ஷ்ட பலனைத் தரும்.

யாருக்கு மங்களகரமானதாக இருக்காது, யார் தங்கம் அணியக்கூடாது என்பதைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

மேஷம்
மேஷம் ராசியினர்கள் தங்க மோதிரம் அணிவதால் தைரியமும் வலிமையும் அதிகரிக்கிறது. எல்லா துறைகளிலும் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கிறது. அதோடு அதிர்ஷ்டமும் சாதகமாக இருக்கும்.

மேலும், எல்லா வேலைகளும் எளிதாக முடிவடையும். குடும்ப வாழ்க்கையில், மனைவியுடன் உறவு வலுப்பெறும். பெற்றோரின் பாசம் கிடைக்கும். நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்கள் எப்போதும் உங்களை ஆதரிப்பார்கள். தங்க மோதிரம் அணிவதன் மூலம் பழைய கடன்கள் படிப்படியாக நீங்கி புதிய வருமானம் கிடைக்கும்.

சிம்மம்
சிம்ம ராசியினர்களுக்கு தங்க மோதிரம் அணிவதால் பெரும் அதிர்ஷ்டத்தை உண்டாக்கும். சூரியனை அதிபதியாக கொண்ட சிம்ம ராசிக்கு, தங்கத்தின் காரணியான வியாழன் கிரகத்துடன் நட்புறவைக் கொண்டுள்ளது.

எனவே, இந்த ராசியினர் தங்கம் அணிவதால், ஆற்றலும், உற்சாகமும் அதிகரித்து, அனைத்துப் பணிகளையும் எளிதாக முடிக்க முடியும். வேலை மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் திட்டங்கள் சிறப்பாக நிறைவேற்ற முடியும். நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுடனான உறவுகள் பலப்படும்.

கன்னி
கன்னி ராசியினர்களுக்கு தங்க மோதிரமானது ஆசைகள் படிப்படியாக நிறைவேறும். தங்கள் வாழ்க்கையை செழுமையாகும். தங்க மோதிரம் அணிய முடியாவிட்டால், செயின் அல்லது வளையல் என அணியலாம்.

உங்கள் ராசிக்கு வியாழன் ஏழு மற்றும் ஐந்தாம் வீடுகளுக்கு அதிபதியாக இருப்பதால் தங்க ஆபரணங்களை அணிவதன் மூலம் சுப பலன்களை பெற முடியும்.

தனுசு
தனுசு ராசியினர்களுக்கு குரு அதிபதியாக விளங்குகிறார். இதனால் சுபத்துவமான பலன்களைப் பெற்றிட முடியும். வேலைகள் விரைவில் முடியும் பலன் விரைவாக கிடைக்கும்.

தங்க உலோகத்தின் காரணியாக குரு கருதப்படுவதால், தங்க ஆபரணங்கள் அணிவதால், வியாழன் கிரகம் வலுவடைகிறது. அதுமட்டுமின்றி அதன் சுப பலன் காரணமாக பணம் தொடர்பான பிரச்சினைகள் நீங்கி, நிதி நிலை மேம்படும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

தங்கம் அணியக்கூடாத ராசிகள்
ரிஷபம், மிதுனம், விருச்சிகம், கும்பம் ஆகிய ராசியினர் தங்க தங்க ஆபரணங்கள் அணிவது நல்லதல்ல. அதேபோல், துலாம் மற்றும் மகரம் குறைந்த அளவிலான தங்கத்தை அணிய வேண்டும்.

Related posts

உண்மை போட்டு உடைத்த இமானின் முதல் மனைவி -சிவகார்த்திகேயன் மோதலில் உண்மை என்ன?

nathan

சினிமாவை விட்டு விலகிய இயக்குனர் ஷங்கர் மகள்?

nathan

30 வயது பெண்ணை கரம் பிடித்த 60 வயது முதியவர்

nathan

மீன ராசியில் சுக்கரப்பெயர்ச்சி

nathan

முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் சுப்ரமணியபுரம் சுவாதி..

nathan

பவதாரிணியின் உடலை தேனியில் அடக்கம் செய்ய ஏற்பாடு

nathan

இந்த 4 ராசிக்காரர்கள் தங்கம் அணிந்தால் அதிர்ஷ்டம் தேடி வருமாம்!!!தெரிஞ்சிக்கங்க…

nathan

தொடர்ந்து அவமானப்படும் தனது மனைவிக்காக செல்வமணி எடுத்த அதிரடி முடிவு.

nathan

5-ம் தேதி பிறந்தவங்க காதல் திருமணம் செய்வார்களாம்

nathan