சரும பராமரிப்பு

சருமத்தை பளபளப்பாக்கும் முட்டைக்கோஸ் பேஷியல்

aed7a59f 7ae6 4d73 a641 4d644579edad S secvpf
பொதுவாகவே பெண்கள் தங்களது அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பர். இதற்காக லேட்டஸ்ட்டாக விற்பனைக்கு வந்துள்ள கிரீம்கள் மற்றும் லோஷன்களை பயன்படுத்தி கொள்வர். ஆனால் இவ்வாறு வாங்கும் பொருட்களில் ரசாயனத்தன்மை இருக்கும். அது சில நேரங்களில் முகத்தில் பக்கவிளைவுகளையும் ஏற்படுத்திவிட வாய்ப்புண்டு.

எனவே வீட்டிலிருந்தபடியே முகத்தை பொலிவுடன் வைக்க சிறந்தது முட்டைக்கோஸ் பேஷியல். இந்த பேஷியலை செய்வதற்கு முதலில் காய்ச்சாத பாலால் முகத்தை நன்கு துடைக்க வேண்டும். பிறகு முட்டைக்கோஸை பச்சையாக அரைத்து அதில் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக பிழிந்து கொள்ளவும். இதன்பின் வடிகட்டி சாறு எடுத்து அந்த சாற்றை தனியாக வைக்கவும். பின் மசித்த முட்டைக்கோஸை கொண்டு முகத்துக்கு மசாஜ் செய்யவும்.

இடையிடையே முட்டைக்கோஸ் சாற்றை விரல்களில் தொட்டுக் கொள்ளவும். இருபது நிமிடங்கள் கழித்து ஈரமான பஞ்சால் முகத்தைத் துடைத்து விடவும். பிறகு முட்டைக்கோஸ் விழுது, பால் ஒரு ஸ்பூன் மற்றும் தேன் 1 ஸ்பூன் சேர்த்து நன்றாக கலந்து முகத்திற்கு பேக் போடவும். மீண்டும் 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவினால் முகம் பளிச்சென்று ஜொலிக்கும். இந்த பேஷியலை பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை செய்து கொண்டால் உங்கள் சருமம் ஜொலிப்பதை காணலாம். மேலும் பருக்கள் இல்லாதவர்கள் என்றால் பத்து நாட்களுக்கு ஒரு முறையும் செய்து கொள்ளலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button