இளமையாக இருக்க

இளமையான தோற்றத்தை தரும் எண்ணெய் மசாஜ்

நாம் உண்ணும் உணவுகள் மட்டுமல்லாது சருமத்திற்கு ஏற்ற முறையான பராமரிப்பும் இல்லாததும் தான் முதுமை தோற்றம் விரைவில் ஏற்படுகிறது. அதிலும் குழந்தை பிறந்து விட்டால் சருமம் சற்று தளர்ந்தது போல தோற்றமளிக்கும். தளர்வை சரிசெய்ய முதுமை தோற்றத்தை தடுக்க எண்ணெய் மசாஜ் மிகவும் அவசியம். மசாஜ் செய்வதால் ஏற்படும் பயன்கள் என்ன என்று பார்க்கலாம்.

* திராட்சை எண்ணெய் எண்ணெயில் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. ஆகவே சருமம் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்கும் அதுமட்டுமல்லாமல் திராட்சை எண்ணெயில் மசாஜ் செய்தால் சரும தளர்ச்சி நீங்குவதோடு ஏதேனும் தழும்புகள் இருந்தால் நாளடைவில் மறைந்து விடும். முகம் நன்கு பொலிவோடு இருக்கும். எந்த வயதிலும் இளமையாக இருக்க விரும்புபவர்கள் இந்த மசாஜை செய்தால் முகச் சுருக்கம் நீங்கி இளமையாக தெரிவீர்கள்.

* நமது உடலில் சருமம் தளர்ந்து காணப்படுவதற்கு காரணம் உடலில் இருக்கும் கொலாஜெனின் உற்பத்தி குறைவாக இருப்பது தான். ஆனால் இந்த அவகோடா எண்ணெயில் இருக்கும் ஒமேகா3பேட்டி ஆசிட் அந்த கொலாஜெனின் உற்பத்தியை அதிகரித்து தளர்ச்சியை குறைத்து விடும். ஆகவே இந்த எண்ணெயை வைத்து மசாஜ் செய்தால் சருமம் இறுக்கமடைந்து முகத்தில் சருமத்துளைகள் அதிகம் காணப்பட்டாலும் அவற்றை விரைவில் போக்கி விடும்.

* உடலுக்கு செய்யும் மசாஜிற்கு பயன்படுத்தும் எண்ணெயில் மிகவும் சிறந்தது நல்லெண்ணெய் தான். சில நேரங்களில் எண்ணெய் மஜாஜ் பருக்களை ஏற்படுத்தும். ஆனால் நல்லெண்ணெய்யை பயன்படுத்தினால் எந்த ஒரு பிரச்சனையும் வராது. இந்த எண்ணெய் சருமத்தில் ஏற்படும் பருக்களை நீக்கி விடும்.

* என்ணெய் வகைகளில் மிகச்சிறந்த எண்ணெய் எதுவென்றால் அது ஆலிவ் எண்ணெய் என்று சொல்லலாம். இதில் ஆக்ஸிடன்ட் மற்றும் ஓமேகா2 பேட்டி ஆசிட் அதிகமாக இருக்கிறது. முக்கியமாக இந்த எண்ணெயை வைத்து மஜாஜ் செய்யும் போது எண்ணெயை எக்காரணம் கொண்டும் சூடேற்றக்கூடாது. அவ்வாறு சூடேற்றினால் அதில் உள்ள சத்துகள் அனைத்தும் அழிந்துவிடும். எனவே ஆயில் மஜாஜ் செய்து உங்கள் இளமையை தக்க வைத்துக்கொள்வது உங்கள் கையில் தான் இருக்கிறது.

b0c785f7 43e0 4d0a 805a 9f3bc764240f S secvpf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button