சைவம்

வெண்டைக்காய் வத்தக்குழம்பு

காரக்குழம்பில் வெண்டைக்காய் போட்டு செய்தால் சூப்பராக இருக்கும். இப்போது சுவையான வெண்டைக்காய் வத்தக்குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சுவையான வெண்டைக்காய் வத்தக்குழம்பு
தேவையான பொருட்கள் :

வெண்டைக்காய் – 12
புளி – எலுமிச்சை அளவிற்கும் மேல்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – 1 இணுக்கு
கொத்தமல்லி – அலங்கரிக்கச் சிறிதளவு

வறுத்து அரைக்க :

கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்
துவரம்பருப்பு – 1/2 டீஸ்பூன்
தனியா – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் – 3(பெரியது)
பெருங்காயம் – சிறிதளவு
வெங்காயம் – 1
தக்காளி – 1/2
பூண்டு – 3 பல்லு

தாளிக்க :

நல்லெண்ணெய் – 3 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
உளுந்தம்பருப்பு – 1 டீஸ்பூன்

செய்முறை :

* வெண்டைக்காயை துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

* தண்ணீரில் புளியை ஊற வைத்து கரைத்து கொள்ளவும். கரைத்த புளித்தண்ணீரில் உப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயம் போட்டு கரைத்து கொள்ளவும்.

* வாணலியில் சிறிது எண்ணெயில் கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, வெந்தயம், தனியா, மிளகாய்வற்றல் ஆகிய பொருட்களைச் போட்டு சிவக்க வதக்கி தனியாக வைக்கவும்.

* அடுத்து வெங்காயம் பூண்டு, தக்காளியை போட்டு தனித்தனியாக சிவக்க வதக்கி ஆற வைத்து, வறுத்த அனைத்தையும் சேர்த்து மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.

* ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, உளுந்தம்பருப்பை போட்டு தாளித்த பின் வெண்டைக்காயை போட்டு நன்றாக வதக்கவும்.

* வெண்டைக்காய் நன்றாக வதங்கியதும் அதில் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.

* அடுத்து அதனுடன் அரைத்த மசாலாவைச் சேர்த்து கொதிக்க விடவும்.

* கொதித்தவுடன் கறிவேப்பிலையைக் கசக்கி குழம்பில் போடவும்.

* தனியே நல்லெண்ணெயைக் காய்ச்சி குழம்புடன் சேர்க்கவும்.

* கொத்தமல்லியைத் தூவி இறக்கவும்.201701211053304010 ladies finger vatha kuzhambu SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button