சரும பராமரிப்பு

தேமலுக்கு ஒரு நிரந்தரத் தீர்வு! கைவைத்தியங்கள் சூப்பரா பலன் தரும்!!

நமது தோலில் நிறமாற்றம் உண்டாவதை பொதுவாக தேமல் என்று சொல்கிறோம். இந்த நிறமாற்றத்திற்கு பல்வேறு மருத்துவ காரணங்கள் இருக்கின்றன. இந்த பிரச்சனையைப் போக்க அலோபதியை நோக்கிப் போனால் வருமானத்தில் பாதியை இழக்க வேண்டியது தான்.

ஆண்களானாலும், பெண்களானாலும் தங்களது முகத்தை அழகாக பிரகாசமாக வைத்துக் கொள்ள நினைப்பது இயல்பு. முகத்தை மெருகூட்டவும், பராமரிக்கவும் தங்களால் என்னென்ன முடியுமோ அவ்வளவையும் செய்கிறார்கள். இதைப் பயன்படுத்திக் கொண்டு அழகு சாதனங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் காலங்காலமாய் கொழித்துக் கொண்டிருக்கிறார்கள். மிகச் சாதாரணமாக கிடைக்கக்கூடிய நமது இயற்கையான பராமரிப்பு முறைகளுக்கு மதிப்பில்லாமல் போய்விட்டது.

தேமல் பிரச்சனைக்கு சித்த மருத்துவத்தில் பல்வேறு தீர்வுகள் உள்ளன. தேமலை கிராமப்புறங்களில் “மங்கு” என்றும் அழைப்பதுண்டு. சருமத்தில் உள்ள தேமல், தழும்புகள், அடையாளங்கள் நீங்கிட நாட்டு மருந்துக் கடைகளில் உள்ள பளிங்கு போல தோற்றமளிக்கும் அரிதாரம் என்ற பொருளை கோவைக் காயின் சாறு விட்டு நன்கு அரைத்து ஒரு நாளைக்கு இரண்டு முறை (காலை மற்றும் மாலை) பத்து நாட்களுக்கு பாதிப்படைந்த இடத்தில் தொடர்ந்து பூசி வர தோல் பிரச்சனைகள் மறைந்து சருமம் அழகாகும்.

அரிதாரம் என்ற பொருள் பளிங்கு போல தோற்றமளிக்கும். அரிதாரம் கட்டியாகவும், தூளாகவும் கிடைக்கும். இதில் கட்டியாக உள்ள அரிதாரம் என்ற பொருளை குறைந்த அளவே (அரை பலம்) மட்டும் பயன்படுத்த வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button