22 62372b82c112e
Other News

உங்க வீட்டுல சிட்டுக்குருவி கூடு கட்டினால் அதிர்ஷ்டமாம்!

மனிதனோடு மனிதனாகப் பின்னி பிணைந்து குடும்பத்தில் ஒருவராக வாழ்கிற பறவையினம் தான் சிட்டுக்குருவி. மேலும் மனித இனத்னோடு அடைக்கலம் ஆவதால், அவற்றை அடைக்கலாங் கூருவி என்றும் கூறுவர்.

வீட்டில் கூடு கட்டினால் அதிர்ஷ்டம்
சிட்டுக்குருவி வீடுகளில் கூடுகட்டினால், அக்குடும்பத்தில் தலைமுறைகள் வாழையடி வாழையாக தழைத்தோங்கும் என்கிற அசாத்திய நம்பிக்கை இன்றளவும் கிராமங்களில் வசிக்கும் மக்களின் மனங்களில் ஆழமாக வேரூன்றி நிற்கின்றன. அதனால்தான் , வீடுகளில் குருவி கூடு கட்டினால், அவற்றை ஒருபோதும் கலைக்கமாட்டார்கள்.

பெரும்பாலும் சிட்டுக்குருவியானது வீடுகளில் உள்ள பரண், மாடம், விட்டம் மற்றும் ஓடுகளின் இடுக்குகளில் உள்ள இடைவெளிகளில் கூடு கட்டி வசிக்கும். மேலும் இன்றைய காலகட்டத்தில் நகர்ப் புறங்களிலும், மாநகரங்களிலும் கான்கிரீட் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.

மேலும் இதுபோன்ற பெரும்பாலான குடியிருப்புகளில் வெளிக் காற்றானது ; வீட்டுக்குள் வராத வகையில் குளிர்சாதன வசதியைப் பெரும்பாலோர் பயன்படுத்துவதால், சிட்டுக்குருவிகள் கூடுகட்டி குஞ்சு பொரிக்க போதிய வசதிகள் இல்லாமல் போய்விட்டது என்பதே மறுக்கமுடியாத உண்மை.

வலியால் கஷ்டப்பட்டு நானும் அழுதிருக்கேன் பாலா! கண்கலங்கிய சிம்பு

அழிந்து வரும் சிட்டுக்குருவி
கடந்த 20ஆண்டுகளில் சிட்டுக்குருவிகளின் இனங்களில் 60சதவிகிதம் அழிந்துவிட்டது என்கிற அதிர்ச்சியூட்டும் தகவல்கள் புள்ளிவிவரங்களுடன் வெளியாகியுள்ளன. அவற்றைத் தடுத்து நிறுத்தி, அப்பறவை இனத்தைப் பாதுகாக்கவேண்டும் என்கிற நல்ல எண்ணத்தோடு, 2010ஆம் ஆண்டு மார்ச் 20ஆம் தேதியை உலக சிட்டுக்குருவி தினமாக ஐ.நா. அங்கீகரித்தது.

செல்போனின் உபயோகம் அதிகரிக்க தொடங்கிய நாள்முதல் சிட்டுக்குருவிகளின் அழிவும் அதிகரிக்க தொடங்கிவிட்டன. அதற்கு முக்கியக் காரணமாக கூறப்படுவது ; செல்போன் டவர்களில் இருந்து வெளியேறும் அதிகபட்சமான கதிர்வீச்சானது சிட்டுக்குருவியின் கருவையே சிதைக்கும் அளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதுதான்.

Related posts

மன்னிப்பு கேட்டார் கனடா பிரதமர் -நாஜி படை வீரருக்கு நாடாளுமன்றத்தில் கவுரவம்

nathan

Emma Stone and Queen Elizabeth Both Wear This $9 Product

nathan

2024-ல் காம களியாட்டம் ஆடப்போகும் ராசிகள் யார் யார்?

nathan

சூடுபிடிக்கப்போகும் பிக்பாஸ் – அந்த 2 பேர் யார் தெரியுமா?

nathan

பிரபல தயாரிப்பாளர் ஜெயமுருகன் மாரடைப்பால் மரணம்…

nathan

26 வயது பெண் 300 பேருடன் பா-லியல் உறவு

nathan

2025-ல் பாபா வாங்கா கணிப்பு– பண மழை பொழியும்

nathan

ஹோலி பண்டிகை கொண்டாடிய நடிகைகள்

nathan

மகளுக்கு பிரமாண்ட திருமணம் நடத்திய ஹோட்டலிலேயே மனைவியுடன் தொழிலதிபர் தற்கொலை..

nathan