Other News

குழந்தைகளின் விரல் சூப்பும் பழக்கத்தை சரிசெய்வது எப்படி…?தெரிஞ்சிக்கங்க…

சில குழந்தைகளுக்கு விரல் சூப்பும் பழக்கம் உள்ளது. அவை சில நேரங்களில் வளர்ந்த பிறகும் தொடர்கிறது. விரல் சூப்பும் குழந்தைகளை கடுமையாக நடத்த கூடாது. வலுக்கட்டாயமாக அவர்களது வாயில் இருந்து விரல்களை எடுத்து விடக்கூடாது. அவர்களிடம் அன்பாகப் பேசி இந்த பழக்கம் எத்தனை தீங்குகளை விளைவிக்கும் என்பதை புரிய வைக்க வேண்டும்.

அடுத்ததாக குழந்தைகள் எப்போதெல்லாம் அதிகமாக வாயில் கை வைக்கிறார்கள் என்பதை கவனித்து அந்த நேரத்தில் குழந்தைக்கு வரைவது அல்லது எழுதுவது இப்படி, எதில் ஆர்வம் அதிகமாக இருக்கிறதோ, அதை கண்டறிந்து, அது தொடர்பான வேலைகளைச் செய்ய பழக்க வேண்டும்.

 

சிறு குழந்தைகளுக்கு கைகளில் க்ளவுஸ் மாட்டி விடலாம்.

வெளியிடங்களில் அல்லாமல் வீட்டில் இருக்கும் போதும் விரலை தொடர்ந்து துணி அல்லது க்ளவுஸ் மாட்டிவிடுங்கள்.

அவர்களுக்கு பிடித்த விஷயங்களைச் செய்யும்போது, அதில் கவனம் செலுத்துவதால் விரல் சூப்புவதை அவர்களாகவே விரைவில் மறந்து விடுவார்கள். இரண்டு வயது வரைக்கும் குழந்தைகளை உங்கள் அருகாமையிலேயே வைத்துக் கொள்ளுங்கள். அவர்களேடு நிறைய நேரம் செலவழியுங்கள்.

பெற்றோரின் அன்பும் அரவணைப்பும் தங்களுக்கு தனிமை தொடர்பான பிரச்சனைகள் அவர்களுக்கு வராது. அதனால் விரல் சூப்பும் பழக்கத்திற்கு அடிமை ஆவது தவிர்க்கப்படும்.

குழந்தைகளோட மனரீதியான பிரச்சனைகளும், விரல் சூப்புவதற்கான காரணமாக இருக்கும். அதாவது ஏமாற்றம், பயம், பதற்றம், தனிமை, கவலை இந்த மாதிரி மனரீதியாக ஏற்படும் பாதிப்புகள் குழந்தைகளை விரல் சூப்பதூண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button