கால்கள் பராமரிப்பு

கால், கை முட்டிப்பகுதி கருமையை போக்கும் வழிகள்

முகம், கழுத்து கை, கால் என மற்றவர்கள் பார்வையில் படும் பகுதிகள் அழகாகத் தெரிய வேண்டும் என்று ஃபேஷியல், பிளீச்சிங், மெடிக்யூர், பெடிக்யூர் செய்துகொள்வதில் ஆர்வம் காட்டுகிறோம். ஆனால் நம்கண்களுக்கு அதிகம் தெரியாத பகுதி என்பதால், கை மூட்டு, கால் மூட்டுப் பகுதிகளுக்கு பலரும் முக்கியத்துவம் கொடுப்பது இல்லை.

நீர்ச்சத்துக் குறைவால் சருமம் வறண்டுபோவதால், இறந்த செல்கள் தேங்கி இப்பகுதிகள் கறுத்துவிடுகின்றன. மூட்டுத்தோல்பகுதி ஆரோக்கியமாக, இயல்பான நிறத்தில் இருக்க சில எளிய விஷயங்களைச் செய்தாலே போதும். மூட்டுப்பகுதியை மசாஜ் செய்வதன் மூலம் ரத்த ஓட்டத் தை சீர்செய்ய முடியும். ரத்த ஓட்டம் சீரானால் கறுப்புத் திட்டுக்கள் மறையும். தேங்காய் எண்ணெயை மூட்டுப் பகுதியில் விட்டு, 5 – 10 நிமிடங்கள் நன்றாக மசாஜ் செய்தால், நல்ல பலன் தெரியும்.
06e8c9d7 b511 4c3d a30b b3a539b63a99 S secvpf
ஆலிவ் எண்ணெயையும் பயன்படுத்தலாம். சூரியனிடம் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களால் தோல் கருமை அடைவதைத் தடுக்கும். கற்றாழையைத் தோல் சீவி, அதனுள் இருக்கும் ஜெல்லை அப்படியே மூட்டுப் பகுதியில் பூசி, 10 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். அரை மணி நேரத்துக்குப் பிறகு தண்ணீரில் கழுவ வேண்டும்.

பாதி எலுமிச்சைப் பழத்தில் சிறிதளவு தேன் விட்டு, மூட்டுப் பகுதியில் ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்து, 30 நிமிடங்கள் அப்படியேவிட வேண்டும். பின்னர், தண்ணீர் விட்டுக் கழுவ வேண்டும். தேன் அதிக அளவு சேர்த்து, தினமும் மசாஜ் செய்தால், விரைவில் கருமை மறையும்.

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button