father
Other News

திருவண்ணாமலையில் குடி போதையில் மகளையே சீரழித்த கொடூர தந்தை..!

திருவண்ணாமலையில் குடி போதையில் மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தாலுகா பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 40). இவர் மனைவி சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் இவர் போதைக்கு அடிமையாகி இருந்துள்ளார். இவருக்கு 19 வயதில் ஒரு மகனும், 17 வயதில் பிளஸ்-1 பயிலும் மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று போதையில் வீடு திரும்பியவர் மகளை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி தனது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து ஆரணி நகர காவல் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜனிடம் புகார் அளித்தனர்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன் சம்பந்தப்பட்ட மாணவியை ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அங்கு இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் மாணவியிடம் விசாரணை நடத்தியதில் அவரை தந்தையே பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது.

இதனையடுத்து மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தையை மகளிர் போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் இறந்தபின் காவலாக இருக்க வேண்டிய தந்தையே போதையில் மகளை பாலியல் வன்கொடுமை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.- source: dailythanthi

Related posts

அறந்தாங்கி நிஷாவின் அழகிய குடும்ப புகைப்படங்கள்

nathan

குழந்தையை நீரில் அமுக்கி கொன்றுவிட்டு தாய் தற்கொலை

nathan

கள்ளக்காதல் விவகாரம்… பெண் கொடூர கொலை…

nathan

சூரிய கிரகணத்துடன் இணையும் சனி பெயர்ச்சி

nathan

மெர்சலான லுக்கில் ரசிகர்கள் மனதை மெல்ட் செய்யும் சூர்யா

nathan

2024 குரு பெயர்ச்சி… அதிர்ஷ்டத்தை தட்டித்தூக்கும் ராசிகள்

nathan

உடலு-றவு கொள்ள மறுத்த மனைவி…!ஆத்திரமடைந்த கணவன்…!

nathan

இணையத்தில் லீக்கான லியோ திரைப்படம்

nathan

ஹீரோயின்களை மிஞ்சும் கவினின் மனைவி..

nathan