மருத்துவ குறிப்பு

கடுகு எண்ணெய்யில் இவ்வளவு நன்மைகளா? அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்

சமையலுக்கு பயன்படுத்தும் கடுகில் மனிதனின் ஆரோக்கிய வாழ்க்கைக்கு தேவையான சத்துக்கள் அடங்கியுள்ளன.
கால்சியம், மாங்கனீஸ், தாமிரம், இரும்பு, செலினியம், துத்தநாகம் போன்ற தாது உப்புக்களும் கடுகில் உள்ளது. கால்சியம் எலும்புகளின் உறுதிக்கும், மாங்கனீஸ் சிறந்த நோய் எதிர்பொருளாகவும், தாமிரம், ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கும், இரும்பு செல்களின் வளர்ச்சிதை மாற்றம் மற்றும் ரத்த அணுக்கள் உற்பத்தியிலும் பங்கெடுக்கின்றன.

கடுகு மற்றும் கடுகு எண்ணெய் ஆகிய இரண்டுமே ஆரோக்கியத்திற்கு சிறந்தது, எனவே சமையலுக்கு கூட நீங்கள் கடுகு எண்ணெய்யை பயன்படுத்தலாம்.

கடுகு எண்ணெய்யின் மருத்துவ பயன்கள்

கடுகு எண்ணெய்யில் ஆன்டி ஆக்ஸிடெண்ட் மற்றும் ஆன்டி பாக்டீரியல் அதிகம் இருக்கிறது.

கை கால் மூட்டு வலி வாயு பிடிப்பு ரத்தக்கட்டு போன்ற பிரச்சனைகளுக்கு கடுகு எண்ணெய்சிறந்த தீர்வு தரும்.

கடுகு எண்ணெய் பெண்கள் தங்கள் முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க உதவும், லேசாக சூடு படுத்தியபிறகு கடுகு எண்ணெயை முகத்தில் தடவி மசாஜ் செய்தால் விரைவில் மறைந்துவிடும்.

கடுகு எண்ணெய்யுடன் நன்கு அரைத்த மஞ்சள் கலந்து முகத்தில் பூசிவந்தால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறையும்.

கடுகு எண்ணெய் கடுகு எண்ணெயால் மசாஜ் செய்வது குழந்தைகளுக்கோ அல்லது பெரியவர்களுக்கோ பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.

இதில் வெப்பத்தை உண்டாக்கும் தன்மை உள்ளதால், குளிர் காலத்தில் மட்டுமே கடுகு எண்ணெய்யை உபயோகப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. கோடைக்காலத்தில் இதை பயன்படுத்தும் போது சருமத்தில் எரிச்சல் உண்டாகும்.

கடுகு எண்ணெய்யை மூட்டுவலிக்கு நல்ல மருந்து. சூடாக்கி பாதிக்கப்பட்ட மூட்டுக்களில் தடவி ஒத்தடம் கொடுக்க வலி குறையும்.

கடுகை அரைத்து முட்டிவலி மற்றும் ரத்தக்கட்டியின் மீதும், தலைவலி உள்ளவர்கள் நெற்றியில் பற்றுப் போட்டால் வலி நீங்கும்.

கடுகு எண்ணெயை குழந்தைகள் முதல் பெரியவர் வரை, உடலில் பூசி ஊரவைத்து குளிப்பது சருமத்திற்கு வனப்பளிக்கின்றது, மேலும் தலை முடி கொட்டுவதையும் தடுக்கிறது.

கடுகுக் கீரை ஜீரணத்தை பாதிக்கும். அதனால் காலநிலைக்கு ஏற்றவாறு உபயோகிக்க வேண்டும்.

கடுகு அதிக கலோரி ஆற்றல் தரக்கூடியது. 100 கிராம் கடுகில் 508 கலோரி ஆற்றல் கிடைக்கும். எளிதில் வளர்ச்சிதை மாற்றம் அடையும் நார்ச்சத்து உள்ளது. கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தும் ஆற்றலும், உடல் பருமனை குறைக்கும் ஆற்றலும் கடுகிற்கு உண்டு.

மட்டன் கறி

கடுகு எண்ணெய்யில் குறைவான கொழுப்பு உள்ளதால், அந்த எண்ணெய்யை பயன்படுத்தி ருசியான மட்டன் கறி செய்யலாம்.

மட்டன் உடலுக்கு நோயெதிர்ப்பு சக்தியை தரும் என்பதால், அதனை கடுகு எண்ணெய்யில் சமைக்கும் போது இன்னும் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

உடல் அலுப்பு, உடல் வலி போன்றவற்றி நல்ல தீர்வு தரும்.mustardoil 002

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button