சரும பராமரிப்பு

ஸ்டீம் பாத் எடுக்கலாம்னு இருக்கீங்களா? உங்களுக்குதான் இந்த விஷயம்

ஸ்டீம் பாத் என்ற நீராவி குளியல் மிகவும் நல்லது. உடலில் இருக்கும் நச்சுக்கல் கழிவுகளை வெளியகற்றும். சருமத்திற்கு புத்துணர்வும், இளமையையும் தரும் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் நீராவி குளியல் செய்வதற்கு முன் மற்றும் பின் இதெல்லாம் நீங்கள் செய்ய வேண்டும் என தல்ஜித் ஹன்ஸ்ராக், ஸ்பர் நிபுணர், அமந்த்ரா ஸ்பா, புது தில்லி அவர்கள் அறிவுரை கூறுகின்றார். வாங்க பாக்கலாம்.

நீராவி குளியலுக்கு முன் சாப்பிடாதீர்கள் :
நீங்கள் நீராவி அறைக்குள் செல்வதற்கு குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன்பாவது உணவை சாப்பிட வேண்டும். நீங்கள் நீராவி அறைக்கு செல்வதற்கு முன் உணவு சாப்பிட்டால் அஜீரணம் உண்டாகும்.

நீர் :
நீராவி அறையில் வழக்கத்தை விட உங்கள் உடலின் வெப்பநிலை உயர்ந்து அதிக வியர்வை வெளிவரும். எனவே நீரேற்றத்துடன் இருக்க உறுதி செய்து கொள்ள அதிக நீரை நீராவி குளியல் அறைக்கு செல்வதற்கு முன் குடியுங்கள்.

குளியல் எடுத்துக் கொள்ளுங்கள்:
முதலில் ஒரு குளியல் எடுத்துக் கொண்டால் அது உடலின் நாற்றம் மற்றும் அழுக்கை நீக்கி நீராவி அறையை மனத்திற்குந்ததாக உங்களுக்கு இருக்கும்.

உடை :
நீராவி குளியலின் போது எளிமையானதை உடுத்துங்கள். அந்த அறையின் வெப்பம் 115 முதல் 125 பாரன் ஹீட்டுக்கு இடையில் இருக்கும மற்றும் அந்த அறை தொடர்ந்து பனிப்புகையுடன் இருக்கும்.
எளிமையான ஆடைகள் உடுத்துவது உங்களை அதிக் உஷ்ணமடைவதிலிருந்து தடுக்கும் மற்ற உடைகள் உங்கள் உடலோடு ஒட்டிக் கொள்ள்வதையும் தடுக்கும்.

பாதுகாப்பாக இருங்கள்:
ஒரு நீராவி அறையில் செருப்பு மற்றும் ஒரு துண்டு அணிய வேண்டும் என்பதை உறுதிசெய்யுங்கள். ஈரமான இடத்தில் கிருமிகளின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆகவே செருப்புடன் கட்டாயம் செல்லுங்கள். சேற்றுபுண் வருவதை தவிர்க்கலாம்.

நேரம் :
குறிப்பிட்ட நேரத்திற்கு ஸ்டீம் பாத்தை எடுக்கவும். 15-20 நிமிடத்திற்குள் வையுங்கள். நீங்கள் மிகவும் உஷணமாகவோ அல்லது அசெள்கரியமாகவோ உணர்ந்தால்,ஒரு கணம் நீராவி அறையிலிருந்து வெளியே வாருங்கள் அல்லது அதோடு முடித்துக் கொள்ளுங்கள்.
பல அமர்வுகளுக்கும் நடுவே நீராவியின் நடுவே குளிர்ந்த காற்றை உங்கள் உடல் வெப்பநிலையை குறைக்க இடைவேளை எடுத்துக் கொள்ளுங்கள்.

நீராவிக்கு பிறகு: ஸ்டீம் பாத் முடிந்த பிறகு குளிர்ந்த நீர் குளியல் எடுத்துக் கொள்ளவும். இதனால் செல்கள் சுருங்காமல் மீண்டும் விரிவடையும். செல் பாதிப்புகல் உண்டாகாமல் இருக்கும்.

23 1485169601 7bath

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button