ஆரோக்கியம் குறிப்புகள்

அரை வேக்காடு முட்டை ஆரோக்கியமானதா?

அனைவரும் விரும்பி சாப்பிடும் முட்டையில் அதிக அளவிலான புரதச்சத்து நிறைந்துள்ளது. பொறித்த முட்டையை காட்டிலும் அரை வேக்காடு ஹாஃப் பாயில் முட்டையை உட்கொள்ளுதலே நன்மையை அளிக்கும். அதற்கு காரணம் அதிலுள்ள ரிபோஃப்ளேவின் மற்றும் செலீனியம்.

அதிக அளவிலான புரதத்தை கொண்டுள்ள முட்டை கலோரிகளை அதிகரிப்பதில்லை. பொரித்த முட்டை போன்ற இதர முட்டை வகைகளுடன் ஒப்பிடுகையில் அரை வேக்காடு முட்டையில் கலோரிகளின் அளவு குறைவே. அரை வேக்காடு முட்டையில் 78 கலோரிகளும் மற்றும் 5.3 கிராம் கொழுப்புகளும் மட்டுமே அடங்கியுள்ளது.

அரை வேக்காடு முட்டையில் கார்போஹைட்ரேட்ஸ், வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் அடங்கியுள்ளது. வலுவற்ற நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ள கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இதனை தவிர்க்க வேண்டும். வலுவான உடல்நலத்தை கொண்டுள்ளவர்களுக்கு தான் அரை வேக்காடு முட்டை ஆரோக்கியத்தை அளிக்கும். நாம் பொரித்த முட்டை சாப்பிடுவதை விட அரைவேக்காடு முட்டையை சாப்பிட்டால் ஆரோக்கியம் கிடைக்கும்.
d7d93195 0b5e 4fbd ac24 d0d0938f45a8 S secvpf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button