மருத்துவ குறிப்பு

தும்மலை தடுக்க முயற்சி செய்யாதீர்கள்

தும்மல் வரும் போது மூக்கின் துளைகள் வழியாக மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் காற்று உள்ளேயும், வெளியேயும் செல்லும். நீங்கள் தும்மலை நிறுத்தினால், இந்த காற்று அழுத்தம் முழுவதும் காதுகள் போன்ற உடலின் வேறு ஒரு அங்கத்திற்கு திசை திருப்பப்படும்.

ஒரு வேளை காதுகள் என்றால், செவிப்பறைகளில் வெடிப்பு ஏற்பட்டு, காது கேட்காமலும் போகலாம். தும்மலை நிறுத்துவதால் உடல்நலத்தின் மீந்தும் கூட தீமையான தாக்கங்கள் ஏற்படலாம். தும்முவதால் நம் உடலுக்குள் நுழைய முயலும் தீமையான பாக்டீரியாக்கள் பலவற்றை வெளியேற்றும். தும்மலை நிறுத்துவதால், இத்தகைய ஆபத்தான கிருமிகள் நம் உடலிலேயே தங்கி, நோய்களை உண்டாக்கும். இந்த வழியில், ஆபத்தான தொற்றுக்கள் நம்மை அண்டாமல் தும்மல் நம்மை பாதுகாக்கும் தும்மலை ஒரு போதும் தடுக்க முயற்சி செய்யாதீர்கள்.

அது உங்கள் உடல் உறுப்புகளுக்கு பாதிப்பை உண்டாக்கி விடலாம். தும்மலால் எழும் காற்று அழுத்தம் காதுகள், மூளை, கழுத்து போன்ற ஏதேனும் உறுப்பிடம் திசை திரும்பி விடலாம். இதனால் அவைகளுக்கு பாதிப்பு உண்டாகும். தும்மலை நிறுத்த முயற்சி செய்வதால் ஏற்படும் ஆபத்தான உடல்நல தாக்கங்களைப் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். அடுத்த முறை தும்மல் வரும் போது, அதை ஒருபோதும் தடுக்க முயற்சி செய்யாதீர்கள். தும்மலை தடுக்க முயற்சி செய்யும் போது கழுத்து காயங்கள் மற்றும் இடைத்தடுப்பில் பாதிப்பு போன்றவைகளும் உண்டாகலாம்.

சில அரிய நேரங்களில், மூளையில் உள்ள நரம்புகளில் ஏற்படும் முறிவுகளால் வாதமும் ஏற்படலாம். பொது இடத்தில் இருக்கும் போதோ அல்லது தும்மல் என்பது தர்மசங்கடமாக கருதப்படும் சில இடங்களில் இருக்கும் போதோ, நாம் தும்மலை நிறுத்த முயற்சி செய்வோம். பிறருக்கு தொந்தரவை அளிக்கலாம் என்ற காரணத்தினால், தும்மலை நிறுத்துவது நல்லதாகவும் ஒழுக்கமான ஒன்றாகவும் கருதப்படும். இருப்பினும், கண்டிப்பாக இது உங்கள் உடல் நலத்திற்கு நல்லதல்ல.

உயிருக்கே ஆபத்தானதாக இருப்பதால், எப்போதும் தும்மலை நிறுத்த முயற்சி செய்ய வேண்டாம். தும்மல் வருவது வெட்கமாக இருந்தால், உங்கள் மூக்கில் கைக்குட்டையை வைத்து தும்மவும். இதனால் குறைந்த சத்தத்துடன் தும்முவது என தும்மும் முறைகளை நீங்கள் மாற்றிக் கொள்ளலாம். உங்கள் மூக்கையும் வாயையும் கைகளால் மூடிக்கொண்டும் தும்மலாம்.
6869c740 43f2 44dd b83e f1e569536b87 S secvpf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button