ஆரோக்கியம் குறிப்புகள்

‘இந்த’ விஷயங்கள ஆண்கள் ரொம்ப ரகசியமாவே வைச்சிருப்பாங்களாம்…அப்படி என்ன ஸ்பெஷல்?

பொதுவாக இந்திய சமூகத்தில் ஆண், பெண் பாகுபாடு உள்ளது. இச்சமூகம் பல விஷயங்களை ஆண்களுக்கு என்றும், பெண்களுக்கு என்றும் பிரித்து வைத்துள்ளது. பொதுவாக பெண்களே உணர்வுகளை அதிகம் வெளிப்படுத்துகிறார்கள். ஆண்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதில்லை, ஏனெனில், ஆண் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற வரையறை. அவர்கள் சில விஷயங்களை யாருக்கும் தெரியாமல் செய்கிறார்கள். ஆண்கள் அவர்கள் தோன்றும் அளவுக்கு சிக்கலற்றவர்கள் அல்ல. உண்மையில், மற்றவர்கள் பொதுவாக பார்க்காத ஆண்களுக்கு நிறைய குணங்கள் உள்ளன.

ஆண்கள் மிகவும் ரகசியமாக இருக்க முடியும். அவர்கள் நீண்ட காலமாகப் பாதுகாத்து வந்த ரகசியங்களை தங்கள் பெண்கள் வெளிக்கொண்டுவருவதை அவர்கள் விரும்பவில்லை. ஆண்கள் யாரிடமும், குறிப்பாக தங்கள் கூட்டாளிகளிடம் சொல்லாத சில ரகசியங்கள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

ஆதரவு

ஒவ்வொரு மனிதனுக்கும் தன் துணையிடம் இருந்து உணர்ச்சிபூர்வமான ஆதரவு தேவை. ஆனால் அவர்கள் அதை கேட்க மாட்டார்கள் வெளிப்படையாகவும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆண்கள் எப்பொழுதும் பலமான மற்றும் வலுவான நபராக தோன்ற முயற்சி செய்கிறார்கள். ஆனால் அவர்கள் அன்பாக உணர விரும்புகிறார்கள். அன்றாட வாழ்க்கையின் மன அழுத்தம் அனைவரையும் பாதிக்கிறது. ஆதலால், தம்பதிகள் இருவரும் ஒருவருக்கொருவர் வெளிப்படையாக ஆதரவாக இருக்க வேண்டும்.

பயம்

பெரும்பாலும் ஆண்கள் தங்கள் அச்சத்தை வெளிப்படுத்துவதில்லை. ஏனென்றால் அவர்கள் பலவீனமானவராக பார்க்கப்பட விரும்பவில்லை. ஆண்கள் வலிமையானவர்களாகக் கருதப்படுகிறார்கள் மற்றும் சமுதாயத்தின் முன் ஒரு துணிச்சலான நபராக முன்நிறுத்த எதிர்பார்க்கப்படுகிறார்கள். ஆனால் சில சமயங்களில், அவர்கள் எதிர்மறையான எண்ணங்கள் மற்றும் அச்சங்களால் நுகரப்படுவதை உணர்கிறார்கள்.

பார்வைகள்

ஆண்கள் இதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆனால் அவர்கள் கடந்து செல்லும் ஒவ்வொரு பெண்ணையும் பார்க்கிறார்கள். பெரும்பாலான ஆண்கள் பெண்களை அவர்களின் தோற்றத்தை வைத்து மதிப்பிடுகின்றனர். அவர்கள் யாரையாவது விரும்பிய பிறகு, அவர்கள் தங்கள் ஆளுமையை அறிந்து கொள்ள விரும்புகிறார்கள்.

மோதல்கள்

பெண்களைப் போலவே ஆண்கள் சிறிய அற்பத்தனமான விஷயங்களையும், மோதல்களையும் கவனிப்பதில்லை. சில சமயங்களில், தங்கள் மனைவி அல்லது காதலி எதைப் பற்றி சண்டையிடுகிறாள் என்பது பற்றி அவர்கள் அறியாமல் இருப்பார்கள். அவர்கள் தங்கள் பங்குதாரர் விரும்பும் அளவுக்கு சிறிய விவரங்களில் கவனம் செலுத்துவதில்லை.

மரியாதை

இவ்வுலகில் பெரும்பாலான ஆண்கள், வாழ்க்கையில் தங்களுக்கு பெண்கள் மரியாதை தர வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் சொல்ல மாட்டார்கள். எப்போதாவது, பிரச்சனைகள் வரும் போது தான் அது தெரிய வரும். அப்போது, ‘ஆம்பிளைன்னு கொஞ்சமாவது மரியாதை கொடுக்குறியா?’ என்று ஆண்கள் கூறுவார்கள். ஆனாலும் ஆண்கள் அவ்வாறு சொல்லாமலேயே அவர்களுக்கு பெரும்பாலான பெண்கள் மரியாதை கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஆண்களின் எண்ணங்களுக்கும், உணர்வுகளுக்கும் பெண்கள் மரியாதை அளித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

பாராட்டுதல்

தங்களைப் பெண்கள் எப்போதும் பாராட்ட வேண்டும் என்று எல்லா ஆண்களும் நினைப்பதுண்டு. ஒரு பெண், தன்னுடைய ஆண் துணையின் ஒரு சிறிய செயலைக் கூட பாராட்டிப் பேசினால் போதும், ஆண்கள் விழுந்து விடுவார்கள். அடுத்த பாராட்டுக்குத் தேவையான அடுத்த செயலை ஆரம்பித்து விடுவார்கள். பாராட்டுவதை யார்தான் விரும்ப மாட்டார்கள். இதில், ஆண்கள் மட்டும் என்ன விதிவிலக்கா? அவர்களும் இதையே விரும்புகிறார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button