ஃபேஷன்அலங்காரம்

அழகு அதிகரிக்க நகைகளை வெரைட்டிய போடுங்க…

வெரைட்டியா-போடுங்க-tamil-beauty-tips-in-tamil-languageதற்போது பெண்களிடையே உடுத்தும் உடைகளுக்கு ஏற்ப நகைகளை அணியும் பழக்கம் அதிகரித்து வருகிறது. வீட்டில் நகை இருக்கிறதே என்பதற்காக அள்ளிப் போட்டுக்கொண்டு போவது அழகையே மாற்றிவிடும். அது ஆபத்தானதும் கூட. எனவே எந்த நேரத்தில் என்ன நகைகளை அணியலாம் என்பதற்கு சில டிப்ஸ்…
* நகைகளைத் தேர்வு செய்யும் பொழுது உங்கள் வயதைக் கவனத்தில் கொள்வது அவசியம். வயதானவர்கள் அளவில் பெரிய நகைகளையும், சிறியவர்கள் சின்னநகைகளையும் அணிவதைத் தவிர்க்க வேண்டும். சீரான நடுத்தர நகைகளை அணியலாம். அது இருவருக்குமே பொருத்தமானது.
• காலை நேரங்களில் நகைகளை குறைவாகவும், இரவில் அதிகமான நகைகளையும் அணியவேண்டும் அப்பொழுதுதான் நகையின் அழகானது அணிபவருக்கு கூடுதல் அழகு தரும். உயரமான பெண்கள் சின்னச் சின்ன நகைகளை அணிந்தால் எடுப்பாக தெரியாது. எனவே அதற்கேற்ப தேர்வு செய்து அணியவேண்டும். நீண்ட கழுத்து கொண்ட பெண்கள் உயரம் குறைந்த கழுத்து ஒட்டிய நெக்லெஸ் அணிவது அழகாக்கி காட்டும்.

• வெளிர் சிவப்பு மற்றும் நீல நிற ஆடைகளுக்கு வெள்ளி நகைகளும், சிவப்பு, மஞ்சள் நிற ஆடைகளுக்கு தங்க நகைகளும் கச்சிதமாகப் பொருந்தும். முக்கியமான விசயம் தங்க நகைகளை தனியாக அணிய வேண்டும். எந்த சூழ்நிலையிலும் தங்கத்தோடு, வெள்ளி, கவரிங் போன்ற நகைகளை இணைத்து அணியக்கூடாது.
• வெளிநாட்டுத் துணி வகைகளை அணிபவராக இருந்தால் அதிகமான நகைகளை அணிய வேண்டாம் அவற்றுடன் மெல்லிய செயின் சின்ன சின்ன ஜிமிக்கியே போதுமானது. அனைத்தையும் விட முக்கியமான விசயம் பொன்னகை அணிவதோடு உதட்டில் புன்னகையும் இருந்தால்தான் அழகை அதிகரித்துக் காட்டும் இல்லையில் வெறும் அலங்கார பதுமையாக மட்டுமே இருக்க நேரிடும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button