அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

சிவப்பழகு ஸ்க்ரப் -தெரிந்துகொள்வோமா?

தேவையான பொருட்கள்
குங்குமப்பூ –   25  கிராம்
வால் மிளகு – 25  கிராம்
லவங்கம் –   25  கிராம்
ஓமம்  –   25  கிராம்
சாம்பிராணி பூ -25  கிராம்

செய்முறை:
மேற்கூறிய பொருட்களை எல்லாம் மிக்ஸியில்
பொடியாக அரைத்து, கலந்து வைத்துக் கொள்ளவும்.
அரை டீஸ்பூன் சிவப்பழகுப் பொடியில், சில சொட்டுக்கள்
பாலோ,நீரோ விட்டு கலந்து குழைக்கவும். தினமும்
முகத்தில் பூசி வர, முகம் பூரண சிவப்பழகு பெறும்.
கண்களைச் சுற்றி தோன்றும் கருவளையங்கள் மறையும்.
முகப்பரு,தேமல் போன்றயவை மறையும்.
முகச்சுருககம் மறைந்து, சருமம் இறுகி
இளமைப் பூச்சு கிடைக்கும்.
அழகு மட்டுமல்ல குங்குமப்பூவிற்கு என
ஸ்பெஷல் மருத்துவக் குணங்களும் உண்டு.
கர்ப்பிணிப் பெண்களுக்குத் தாம்பூலத்தில் வைத்துத் தர,
சுகப்பிரசவம் ஆகும். பிரசவம் ஆன இளம்
தாய்மார்களுக்கு பசும்பாலில், ஒரு டேபிள் ஸ்பூன்
தேன், ஒரு சிட்டிகை குங்குமப்பூ போட்டுக் கலந்து
தர, தேக ஆரோக்கியம் வலுப்படும். தாய்பாலும்
நன்கு சுரக்கும்.
குங்குமப்பூவை தாய்ப்பால் விட்டு, உரசி,பற்றுப்
போட்டால், தலைவலி குணமாகும். சிறு
குழ்ந்தைகளுக்கு குங்குமப்பூவை தாய்பால் விட்டு
உரசி உள்ளுக்குள் கொடுத்தால் சளி, கபம்,மந்தம்
நீங்கும்.
சீதளம் காது வலி குணமாகும். கண்ணில் பூ
விழுந்திருந்தாலும், தாய்ப்பாலில் குங்குமப்பூ உரசி,
சில சொட்டுக்கள் விட, கண் பூ குணமாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button