எடை குறைய

குறைந்த நேரத்தில் அதிக கலோரிகளை எரிக்கும் டிரெட்மில் பயிற்சி

உடல் எடை குறைந்து, ஃபிட்டாக இருக்க பல்வேறு பயிற்சிகள் உள்ளன. ஆனால், எந்தப் பயிற்சிகளைச் செய்தால், உடல் எடை குறையும் என்பதுதான் பலருக்கும் தெரிவது இல்லை. நடைப்பயிற்சி முதல் வலுவூட்டும் பயிற்சிகள் வரை ஒவ்வொரு பயிற்சியிலும் நாம் செய்யும் வேகத்தைப் பொறுத்து கலோரிகள் எரிக்கப்படும். குறைந்த நேரத்தில் அதிக கலோரிகளை எரிக்கும் பயிற்சிகளைச் செய்தால், எடையை விரைவாகக் குறைக்க முடியும்.

* ஒரு மணி நேரத்துக்கு ஆறு கிலோ மீட்டருக்கு அதிகமான வேகத்தில் நடக்க ஏற்றவாறு செட்டிங்கை மாற்றி, சற்று வேகமாக நடக்க வேண்டும்.

* இந்தப் பயிற்சியில் அரை மணி நேரத்தில் 350 கலோரிகள் வரை எரிக்க முடியும். டீன் ஏஜில் இருந்து டிரெட்மில் பயிற்சி செய்யலாம்.

* இந்தப் பயிற்சியில் உடல் முழுவதும் உள்ள கொழுப்பு சீராகக் குறையும்.

* நுரையீரல் மற்றும் இதயச் செயல்பாடுகளைச் சீராக்கும். சி.ஓ.பி.டி., மாரடைப்பு போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறைகின்றன.

* உடலில் நிலைத்தன்மை மற்றும் உறுதித்தன்மை அதிகரிக்கும். இதனால், வொர்க்அவுட் செய்வது எளிதாகும்.
368546199 283x300

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button