மருத்துவ குறிப்பு

குங்குமப்பூவை கர்ப்பிணிகள் உண்பது எதற்காக தெரியுமா?தெரிந்துகொள்வோமா?

கர்ப்ப காலத்தில், கருவுற்றிருக்கும் பெண்களின் தாய்மார்கள் அனைவரும் தனது மகளின் வயிற்றில் வளரும் குழந்தையின் நலன் கருதி, பல்வேறு அறிவுரைகளை கூறுவதுண்டு.
அவற்றில் ஒன்று தான் குங்குமப்பூ. ஆசிய நாடுகளில் கர்பிணித் தாய்மார்கள் குங்குமப்பூவை உண்பது தற்போது வழக்கமாகியுள்ளது. எனினும், மேலைத்தேய நாடுகளில் இது குறைவு தான்.
அது சரி, குங்குமப்பூவை உண்பதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன என கூறப்படுகின்ற போதும், குங்குமப்பூவை உட்கொள்ளக் கூடாது என ஒரு சிலர் வாதிடுகின்றனர்.இந்த குழப்பத்தால் இன்றைய தாய்மார்கள் குங்குமப்பூவை புறக்கணித்து விடுவதுண்டு. ஆனால், இதில் உள்ள பல்வேறு நன்மைகள் பற்றி அறிந்திருந்தால் அவர்கள் கண்டிப்பாக குங்குமப்பூவை புறக்கணிக்க மாட்டார்கள்!
அந்த நன்மைகள் என்னவென்று இப்போது பார்ப்போம்!
உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும் குங்குமப்பூவில் உள்ள பொட்டாசியம் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கின்றது. எனவே கர்ப்பிணிகள் இதை உண்பதால் அவர்களுக்கு உள்ள இரத்த அழுத்தம் குறையும்.

உணவு நல்ல முறையில் சமிபாடடையும் குங்குமப்பூவானது இரத்த ஓட்டத்தை சீர் செய்து உணவு சமிபாடடைதலை இலகுவாக்கின்றது.
தலைமுடி உதிர்வதை தடுக்கும்
தலைமுடி உதிர்வதை தடுக்கும்கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹோர்மோன் மாற்றங்களால் தாயின் உடலிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழும். இந்த மாற்றத்தில் ஒன்று தான் தலைமுடி உதிர்தல். குங்குமப்பூவை உண்பதன் மூலம் தலைமுடி உதிர்வது கட்டுப்படுத்தப்படும்.

குழந்தையின் அசைவை நன்கு உணர முடியும்
குழந்தையின் அசைவை நன்கு உணர முடியும்தாய் ஒருவர் குங்குமப்பூவை உண்பதால் அவரது உடலின் வெப்பநிலை அதிகரிக்கும். இதனால் வயிற்றில் உள்ள குழந்தை அடிக்கடி அசையும். வயிற்றில் உள்ள குழந்தையின் அசைவை நுட்பமாய் தொட்டு இரசிக்கும் தாய்க்கு இந்த குங்குமப்பூ உதவி புரிகின்றது.

இதயத்தை பாதுகாக்கின்றது
இதயத்தை பாதுகாக்கின்றதுகுங்குமப்பூவில் உள்ள பொட்டாசியம், அன்டிஒக்ஸிடன்ஸ், மற்றும் குரோசெட்டின் ஆகியன கொலஸ்ரோல் அளவை பாதுகாத்து குழந்தையின் இதயத்தை பாதுகாக்கின்றது.

குமட்டலை தடுக்கும்
குமட்டலை தடுக்கும்கர்ப்ப காலத்தில் பொதுவாக அனைத்து தாய்மார்களுக்கும் உள்ள பிரச்சினை தான் இந்த குமட்டல். குங்குமப்பூவானது இந்த குமட்டலுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்றது25 1500975937 1

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button