Baby Potatoes Fry
சைவம்

பேபி உருளைக்கிழங்கு கறி

தேவையானவை:

பேபி உருளைக்கிழங்கு…….1/4 கிலோ
மிளகாய்ப் பொடி………..1/2 தேக்கரண்டி
சீரகம்……………….. 1/4 தேக்கரண்டி
தேங்காய்…………….. 2 தேக்கரண்டி
சின்ன வெங்காயம்…………10
கறிவேப்பிலை ………….ஒரு கொத்து
தே. எண்ணெய்…………… 2 தேக்கரண்டி
கடுகு + உ.பருப்பு…………… 1/2 தேக்கரண்டி
உப்பு ………………..தேவையான அளவு

செய்முறை:

வெங்காயத்தை உரித்து நைசாக நறுக்கவும். தேங்காய், சீரகத்தை நன்கு அரைக்கவும். பேபி உருளைக்கிழங்கை நன்கு கழுவி ஒரு ஊசியால் நான்கைந்து இடத்தில் துளை போடவும். குக்கரில் அளவான நீர் விட்டு, கொஞ்சம் உப்பு போட்டு அதில் உருளையை வேகவைக்கவும்.
உருளை வெந்ததும் தோல் உரிக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், அதில் கடுகு+உ.பருப்பு போட்டு, வெடித்ததும், நறுக்கிய வெங்காயம் + கறிவேப்பிலை போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், மி.பொடி போட்டு பிரட்டி, அதிலேயே அரைத்த தேங்காய் விழுது +உப்பு+உருளையை முழுசாகப் போடவும். தீயைக் குறைத்து வைக்கவும். லேசாகப் பிரட்டி விடவும். தண்ணீர் விடவேண்டாம். 10 நிமிடம் பெரட்டி விட்டு, இறக்கி விடலாம்.

பேபி உருளைக் கிழங்குக் கறி படு சூப்பராய் இருக்கும். நீங்களும் செய்யலாமே.. சாம்பார் சாதம், சப்பாத்திக்கு நல்ல துணை இது.
Baby Potatoes Fry

Related posts

செட்டிநாடு பலாக்காய் கறி

nathan

வடை கறி

nathan

கொப்பரி பப்பு புளுசு

nathan

பிரவுன் சேமியா பிரியாணி

nathan

ரவா பொங்கல்

nathan

சூப்பரான தக்காளி தேங்காய் பால் சாதம்

nathan

சத்து நிறைந்த நெல்லிக்காய் சாதம்

nathan

கத்தரிக்காய் வறுவல் – Brinjal / Eggplant Fry

nathan

முருங்கைக்காய் மிளகு குழம்பு

nathan