28.6 C
Chennai
Tuesday, May 21, 2024
pre 15
ஆரோக்கியம் குறிப்புகள்

முதல் மற்றும் இரண்டாம் குழந்தைக்கும் எவ்வளவு ஆண்டுகள் இடைவெளி விட வேண்டும்?

தம்பதியர்களின் வாழ்க்கையை முழுமை ஆக்குவது குழந்தைகள் தான். குழந்தைகள் பெண்ணின் வயிற்றில், தம்பதியர்களின் காதலின் அடையாளமாக உருவாகி பிறந்தால் தான், வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற உத்வேகம் அல்லது வாழ்விற்கான அர்த்தம் தம்பதியருக்கு கிடைக்கும் என்றே கூறலாம்.

What Age-gap Is Right Between First And Second Child
தம்பதியர் முதல் குழந்தையை பெற்று எடுத்த பின், மேலும் தங்கள் வாழ்க்கையை வசந்தமாக்க இரண்டாம் குழந்தைக்கு திட்டம் இடுவர். அப்படி முதல் குழந்தைக்கு பின் இரண்டாம் குழந்தையை கருத்தரிக்க வேண்டியதற்கான முயற்சியை மேற்கொள்ள தம்பதியர் எத்தனை ஆண்டுகள் இடைவெளி விட வேண்டும் என்று இந்த பதிப்பில் பார்க்கலாம்.

இடைவெளி வேண்டுமா?

தம்பதியரின் வாழ்வில், முதல் குழந்தை பிறந்த பிறகு இடைவெளி விட்டு தான் இரண்டாம் குழந்தைக்கான முயற்சி மேற்கொள்ள வேண்டுமா என்று பலர் எண்ணுவது உண்டு; இந்த எண்ணம் ஏற்பட காரணமாக இருப்பது முதல் கர்ப்ப காலத்தின் பொழுது, மனைவியை விட்டு பிரிந்து இருந்ததினால் ஏற்பட்ட தாபமும், பின் பிரசவத்தால் மனைவியை பக்கத்திலேயே இருந்து பார்த்துக் கொண்டு பிரிந்து இருந்த ஏக்கமும் தான்.

அவசியம் வேண்டும்?!

இந்த தாபத்தின் ஏக்கத்தின் காரணமாக குழந்தைக்கு 3 மாத வயது ஆகும் பொழுது, அதாவது மனைவிக்கு பிரசவம் முடிந்து மூன்று மாதங்கள் ஆன பின் தம்பதியர் கலவி கொண்டு, அடுத்த குழந்தை உடனே கருத்தரித்து விட்டால், பெண்கள் மிகவும் கஷ்டப்பட வேண்டி இருக்கும். ஏனெனில் முன்பு முடிந்த பிரசவம் ஆறவே ஆறு மாதம் முதல் ஒரு வருடம் தேவைப்படும்; இதில் காயம் ஆறும் முன் அடுத்த கர்ப்பம் என்றால் அவ்வளவு தான்.

ஆகையால் முதல் குழந்தையை பெற்று எடுத்த பின், இரண்டாம் முறை கருத்தரிப்பிற்கு இடையே சரியான இடைவெளியை விட வேண்டியது அவசியம்.

எத்தனை ஆண்டுகள்!?

முதல் மற்றும் இரண்டாம் குழந்தையை பெற்று எடுப்பதற்கு இடையே ஒரு ஆண்டுகள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை இடைவெளி விடலாம். ஆனால், எது சரியான இடைவெளியாக இருக்கும், இந்த இடைவெளி விடுவதில் ஏதேனும் வகைகள் உள்ளனவா என்று சிந்தித்து பார்க்க வேண்டியது மிகவும் அவசியம். இப்பொழுது இடைவெளியில் இருக்கும் வகைகளை பற்றி பார்க்கலாம்.

குறுகிய கால இடைவெளி!

குறுகிய கால இடைவெளி என்பது குழந்தை பிறந்து ஒரு வருடம் அல்லது அதற்கும் குறைவான காலத்திலேயே இரண்டாம் குழந்தைக்கு முயற்சிப்பது. இது சரியான காலம் அல்ல. ஏனெனில் முதலில் பிறந்த கே குழந்தை கைக்குழந்தையாக இருக்கும்; அச்சமயத்தில் குழந்தையை கவனிப்பதா அல்லது கர்ப்பத்தினால் பெண்ணின் உடலில் ஏற்படும் பலவீனத்தை சமாளிப்பதா என்ற பிரச்சனை இருக்கும்.

இந்த குறுகிய இடைவெளியை மேற்கொண்டால், கட்டாயமாக பெண்ணின் உடல் ஒரு வழியாகி விடும் என்று உறுதியாக கூறலாம்.

மேலும் படிக்க: குழந்தை பிறக்கும் பொழுது தொப்புள் கொடியை வெட்டாமல் விட்டால் என்ன ஆகும்?

சரியான காலம்!

முதல் குழந்தைக்கு பின் இரண்டு வருடம் அல்லது மூன்று வருடம் கால இடைவெளி விட்டு பின் இரண்டாம் குழந்தைக்கான கர்ப்பம் தரிக்க முயற்சி மேற்கொண்டால், மிகவும் நன்றாக இருக்கும். இது தான் மிகச்சரியான காலம் என்று கூறலாம். குழந்தையும் ஓரளவு வளர்ந்து இருக்கும்; பெண்ணின் உடலும் நன்கு தேறி இருக்கும்.

முதல் குழந்தை!

மேலும் பிறந்த முதல் குழந்தைக்கு நடக்கும் விஷயங்கள் புரிந்து தனது தம்பி அல்லது தங்கையை காண வேண்டிய ஆவலும் பொறுப்பும் கூட ஏற்படும். ஆனால், கர்ப்ப கால பலவீனத்தால் பெண்கள் குழந்தையை விட்டு சிறிது விலகி சென்று ஓய்வு எடுத்தாலும், அது எதிர்மறை விளைவுகளை குழந்தையிடத்தில் உண்டு செய்யலாம். ஆகையால், முதல் குழந்தையின் மீது கொண்ட அன்பு மாறாமல், குழந்தையுடன் செலவிட்ட நேரம் மாறாமல் எப்பொழுதும் போல் முதல் குழந்தையுடன் இருக்க வேண்டியது அவசியம்.

தாமதமான இடைவெளி!

குழந்தை பிறந்து ஐந்தாம் ஆண்டில் அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாம் குழந்தைக்கான முயற்சி மேற்கொண்டால், அது சரியாக இருக்காது. ஏனெனில் குழந்தையும் நன்கு வளர்ந்து விடும்; ஐந்து ஆண்டுகள் தனிக்காட்டு ராஜா போல் வாழ்ந்து கேட்டது கிடைத்து கொண்டு இருந்த முதல் குழந்தைக்கு போட்டி மனப்பான்மை எழலாம்.

யோசிக்க வேண்டிய விஷயங்கள்!

மேலும் இரண்டாம் கருத்தரிப்பு நிகழ பெண்கள் மற்றும் ஆண்களின் உடலில் கருமுட்டைகள் இருக்க வேண்டியது அவசியம்; ஏனெனில் சிகிச்சை, வயது காரணமாக அவை இல்லாமல் போய் விட்டால், மீண்டும் கருத்தரிப்பு என்பது நடக்காத காரியம் ஆகி விடும்.

இது மட்டும் அல்லாமல் வயதை பற்றி இரண்டாம் குழந்தை கருத்தரிப்பின் பொழுது யோசிப்பதுடன், தம்பதியரின் உடல் பலம், நிதி நிலைமை, முதல் குழந்தையின் குணம், எத்தனை கால இடைவெளி தங்களின் வாழ்க்கைக்கு சரியாக இருக்கும் என இது போன்ற விஷயங்கள் பற்றியும் தம்பதியர் யோசிக்க வேண்டும்.

 

தாம்பத்தியம் இல்லையா?!

முதல் குழந்தை பிறந்த பின் இரண்டாம் குழந்தை கருத்தரிப்புக்கு தான் இந்த கால இடைவெளி எல்லாம். மற்ற படி முதல் பிரசவத்திற்கு பின் பெண்ணின் உடல் பழைய நிலையை அடைந்ததும், பாதுகாப்பான முறையில், குழந்தையையும் பெண்ணின் உடலையும் தொந்தரவு செய்து விடாத வகையில் தம்பதியர் கலவி கொள்ளலாம்.

தம்பதியர் மேற்கொள்ளும் கலவி குழந்தை பிறப்பை மட்டும் ஏற்படுத்தி விடாமல் இருக்கும் வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்; தேவையான சமயத்தில் குழந்தையை கருத்தரித்து பெற்றுக் கொள்ளலாம்.

Related posts

வீடு முழுவதும் நறுமணமாக வாசமாக இருக்க வேண்டுமா? இதோ உங்களுக்காக டிப்ஸ்.!

nathan

உங்களுக்கு தெரியுமா அடிக்கடி தலைக்கு குளிப்பது நல்லதா?

nathan

தெரிஞ்சிக்கங்க…குழந்தையை இரகசியமாக கண்காணிப்பாதல் எத்தனை தீமைகள் உண்டாகும் என தெரியுமா?

nathan

மோசமான தலைவலி மற்றும் ஒற்றை தலைவலியை ஈஸியா குணப்படுத்த

nathan

முதுமையில் ஆரோக்கியமாய் வாழ இளமையில் செய்ய வேண்டியவை ?தெரிஞ்சிக்கங்க…

nathan

பெற்றால் மட்டும் போதுமா? நல்ல பிள்ளையாக வளர்க்க என்ன செய்யனும்?

nathan

வாய் புண்களை குணப்படுத்தும் சூப்பர் டிப்ஸ்…

nathan

சூப்பர் டிப்ஸ் !தாய்ப்பால் குறைவா? காலடியில் கிடக்குது பாலாடை…

nathan

உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் நமது தினசரி செயல்பாடுகள்!!!

nathan