முகப் பராமரிப்பு

முல்தானி மெட்டி எதற்கெல்லாம் பயன்படுகிறது?தெரிந்துகொள்வோமா?

எண்ணெய் பசை சருமம், முகப்பருவால் பொலிவை இழந்த சருமம், வறண்ட சருமம் என அனைத்து வகையான சருமத்திற்கும் ஏற்றது முல்தானி மெட்டி.

ஃபுல்லர்ஸ் எர்த் என்றழைக்கப்படும் முல்தானி மெட்டி, பலரது விருப்ப தேர்வாகவும் இருக்கிறது.

இதில் மக்னீசியம், குவார்ட்ஸ், சிலிகா, இரும்பு, கால்சியம், கால்சைட் மற்றும் டாலமைட் உட்பட பல்வேறு கனிமங்கள் அடங்கி உள்ளது.

சருமத்திற்கு இதை பயன்படுத்துவதால் எந்தவொரு பக்கவிளைவையும் ஏற்படுத்தாது.

குறிப்பாக முகத்தில் உள்ள இறந்த செல்களை அகற்ற உதவுகளிது, முகத்தில் தோன்றும் கரும்புள்ளிகள், எண்ணெய் பசை மற்றும் பருக்களை அகற்றவும் செய்கிறது.

 

எண்ணெய் பசை சருமம்
முல்தானி மெட்டியை எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் பயன்படுத்தும் போது சருமத்தில் உள்ள துளைகளையும் அழுக்குகளையும் நீக்கி சருமத்தை சுத்தப்படுத்தி எண்ணெய் வடியும் பிரச்சனைகளுக்கு முற்று புள்ளி வைக்கிறது.

முல்தானி மெட்டியை தண்ணீரில் குழைத்தோ அல்லது சந்தனம், ரோஸ் வாட்டர் போன்றவற்றுடன் கலந்தோ முகத்தில் ஃபேஸ் பேக்காக போடலாம்.

வாரத்தில் இரண்டு முறையோ அல்லது மூன்று முறையோ செய்து வரும்போது முகத்தில் உள்ள எண்ணெய்பசை வடியும் பிரச்சனை குறையும்.

 

எப்படி பயன்படுத்தலாம்?

ஒரு தேக்கரண்டி முல்தானி மட்டி பவுடருடன், தேவையான அளவு பன்னீர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து பேஸ்ட் போல கலக்கி கொள்ளவும்.

இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி, 15 முதல் 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின் சுத்தமான நீரால் முகத்தை கழுவவும், வாரம் இருமுறை இதனை செய்து வரலாம்.

”மூலிகை வயாக்ரா” அஸ்வகந்தாவின் இன்னும் பல நன்மைகள்

முகத்தில் தழும்புகள் இருந்தால்
முகம் முழுக்கவோ அல்லது பருக்கள் மற்றும் அதனால் ஏற்படும் தழும்புகள் இருக்கும் இடத்திலோ முல்தானி மெட்டியை அடிக்கடி வைக்கும் போது அதற்கான பலனை எதிர்ப்பார்க்கலாம்.

 

எப்படி பயன்படுத்தலாம்?

முல்தானி மெட்டி பொடியை தயிருடன் கலந்து முகத்தில் ஃபேஸ் பேக் போல பயன்படுத்தலாம்.

முல்தானி மெட்டியுடன் புதினா பொடியை கலந்து பயன்படுத்தும் போது சருமத்திற்கு நல்ல பொலிவை தரும்.

1 தேக்கரண்டி முல்தானி மட்டி பவுடருடன், 1 தேக்கரண்டி மஞ்சள் பொடி, 1 தேக்கரண்டி சந்தனப் பொடி மற்றும் 2 தேக்கரண்டி தக்காளி சாற்றை கலக்கவும்.

இந்த கலவையை, முகத்தில் பருக்கள் மற்றும் தழும்பு உள்ள இடங்களில் தடவவும். 10 முதல் 15 நிமிடங்கள் வரை ஊறவைத்த பிறகு, குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும்.

இதேபோன்று வாரம் 3 முறை செய்தால், நல்ல பலனை பெறலாம்.

நாள்பட்ட இருமல், சளியால் அவஸ்தையா? கவலையே வேண்டாம்

கருவளையம் நீங்க
ஆண், பெண் என இருபாலருக்கும் கருவளையம் ஏற்படலாம், அதிக வேலைச் சுமையினால் போதுமான தூக்கம் கிடைக்காததால், கண்களைச் சுற்றி கருப்பான வளையங்கள் வருகின்றன.

இவ்வாறு கருவளையங்கள் வருவதால், முகம் சற்று பொலிவிழந்து, முதுமைத் தோற்றத்தை தருகிறது, இதற்கு முல்தானி மெட்டி மூலம் தீர்வு காணலாம்.

 

எப்படி பயன்படுத்தலாம்?

முல்தானி மெட்டியுடன் உருளைக்கிழங்கு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து கண்களுக்கு அடியில் தடவி வரும் போது கருவளையம் விரைவில் மறைந்து பளிச் சருமத்தை தரும்.

முல்தானி மெட்டியுடன் வெள்ளரிச்சாறு சேர்த்து கண்களுக்கு கீழே தடவி வந்தால் கருவளையம் படிப்படியாக மறையும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு தாறுமாறாக நன்மை அளிக்கும் சிகப்பு அரிசி

தலைமுடி ஆரோக்கியத்திற்கு
இன்று ஆண், பெண் என சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று முடி உதிர்தல், பொடுகு, இளநரை.

இதற்கும் முல்தானி மெட்டியை கொண்டு தீர்வு பெறலாம்.

 

எப்படி பயன்படுத்தலாம்?

முல்தானி மெட்டியுடன் முட்டை, நெல்லிக்காய், எலுமிச்சை சாறு இவற்றுடன் பீர் கலந்து தலையில் தடவி இருபது நிமிடம் கழித்து குளித்து வரலாம்.

இதனால் முடிகள் ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் இருப்பதோடு முடி உதிர்தல் பிரச்சனைகளையும் சரி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்களே மின்னும் சருமம் வேண்டுமா? இதோ சூப்பரான டிப்ஸ்

வறண்ட சருமம் இருந்தால்
சருமத்தின் மேல் அடுக்கு பகுதியில் போதுமான ஈரப்பதம் அல்லது எண்ணெய் இல்லாததால் சருமம் வறண்டு போகிறது, இதனால் சருமத்தில் அலர்ஜி, தடிப்புகள் உண்டாகலாம், இதனையும் முல்தானி மெட்டி கொண்டு சரிசெய்யலாம்.

 

எப்படி பயன்படுத்தலாம்?

ஒரு தேக்கரண்டி முல்தானி மட்டி பவுடருடன், ஒரு தேக்கரண்டி தேனை சேர்த்துக் கொள்ளவும்.

இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி, 15 முதல் 20 நிமிடங்கள் காத்திருக்கவும்.

பின் முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவவும். வாரம் இருமுறை இதை செய்துவந்தால் நல்ல பலனை காணலாம்.

குப்பைமேனியின் அசர வைக்கும் மருத்துவ பலன்கள்

குறிப்பு
முல்தானி மெட்டி நல்லது என்றாலும் தொடர்ந்து சருமத்தில் பயன்படுத்தி வந்தால், நீர்ச்சத்து முழுமையாக குறைந்து சருமம் உலரத் தொடங்கி விடும்.

இது அனைவருக்கும் ஏற்றது என்றாலும் ஒரு சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம்.

எக்காரணத்தை கொண்டு முல்தானி மெட்டி வாய் வழியாக நம் உடலினுள் செல்லாததை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button