ஆரோக்கியம்உடல் பயிற்சி

வயதிற்கு ஏற்ற உடற்பயிற்சிகள்

13e9e701-7fe1-49de-92d5-cb48e895bb2f_S_secvpf.gifஉடலில் உள்ள கலோரிகள் எரிக்கப்பட்டு தசைகள் வலுப்பெறவும் அழகான உடலமைப்பு கிடைக்கவும் வழி செய்வதுதான் உடற்பயிற்சி. ‘ஜிம்’ செல்வதற்கு வயது வரம்பு எதுவும் கிடையாது. ஆனால், ஒவ்வொரு வயதினரும் அவரவர் உடல்வாகுக்கு ஏற்ற உடற்பயிற்சிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்பது இங்கே முக்கியம்.

உடற்பயிற்சிகளில், கார்டியாக் ஃபிட்னெஸ் (Cardiac fitness), ஏரோபிக்ஸ் (Aerobics), வெயிட் லிஃப்டிங் ட்ரெயினிங் (weight lifting training) என மூன்று விதங்கள் இருக்கின்றன. சைக்கிளிங், ரெகம்பென்ட் பைக் (Recumbent Bike), ட்ரெட்மில் (Treadmill) போன்ற பயிற்சிகள் கார்டியாக் ஃபிட்னெஸ் உடற்பயிற்சிகள்.

ஏரோபிக்ஸ் பயிற்சிகளில், உடம்பில் உள்ள அனைத்து மூட்டுகளுக்கும் அதன் அசைவுகளுக்குத் தகுந்தாற் போன்று (எடை எதுவும் இன்றி) பல்வேறு திசைகளில் பயிற்சி மேற்கொள்ளப்படும். வெயிட் லிஃப் டிங் பயிற்சிகளில், அதிகமான எடை தூக்கி உடற்பயிற்சி செய்வார்கள்.

18 வயதில் இருந்து 21 வயது வரையிலும் உடம்பில் உள்ள எலும்புகளின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். எனவே, இத்தகையப் பருவத்தில் இருப்பவர்கள், கார்டியாக் ஃபிட்னெஸ் மற்றும் ஏரோபிக்ஸ் பயிற்சிகளை மட்டுமே மேற்கொள்வது நல்லது!”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button