weightgain 15
மருத்துவ குறிப்பு

பிரசவத்திற்கு பிறகு அதிகரிக்கும் வயிற்று கொழுப்பைக் கரைப்பதற்கான சில எளிய வழிகள்!தெரிந்துகொள்வோமா?

பொதுவாக கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு 5-18 கிலோ வரை உடல் எடை அதிகரிக்கிறது. பிரசவத்திற்கு பிறகு இந்த எடையைக் குறைப்பது என்பது சற்று கடினமான காரியம் தான். பிறந்த குழந்தையை பேணுவது, இல்லத்து பொறுப்புகளை நிறைவேற்றுவது ஆகிய வேலைகளுக்கு மத்தியில் தங்கள் உடல் எடை மீது அக்கறை செலுத்துவது இயலாமல் போகலாம். பிரசவித்த அடுத்த சில நாட்களில் இருந்தே உடற்பயிற்சி செய்ய தொடங்குவதால் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு மட்டுமல்லாமல் பிரசவத்திற்கு பிறகு உண்டாகும் மனச்சோர்வும் குறைவதற்கான வாய்ப்பு உள்ளது. கர்ப்ப காலத்திற்கு முன் நீங்கள் நிர்வகித்து வந்த உடல் எடையை மீண்டும் பெறுவதற்கு சில எளிய வழிமுறைகள் உள்ளன.

ஒவ்வொரு பெண்ணும் அனுபவிக்கும் கர்ப்ப காலம் மற்றும் பிரசவம் வெவ்வேறானது. ஆகவே நீங்கள் பிரசவத்திற்கு பிறகு எந்த ஒரு உடற்பயிற்சி திட்டத்தையும் தொடங்குவதற்கு முன்னர் உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசித்து முடிவெடுக்கவும். உடற்பயிற்சி செய்யும் போது உங்களுக்கு ஏதாவது அசௌகரியம் அல்லது அதிகமான இரத்தப்போக்கு ஆகியவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை சந்திப்பது நல்லது.

 

பிரசவத்திற்கு பிறகு வயிற்றில் தோன்றும் அதிக கொழுப்பைப் போக்க இங்கு 6 எளிய குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கவும்

பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால் தாய்மார்களுக்கு தினமும் 500 கலோரிகள் எரிக்கப்படுகின்றன. அதே நேரம் தாய்ப்பால் உற்பத்திக்கு போதுமான கலோரிகள் உங்களுக்கு கிடைப்பதை நீங்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். நீங்கள் ஓய்வாக இருக்கும்போது கலோரிகள் எரிக்கப்படுவதை விட சிறந்த தீர்வு வேறு என்ன இருக்க முடியும்?

அடிக்கடி சாப்பிடுங்கள்

பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை உட்கொள்வதற்கு மாற்றாக இயற்கை உணவுகளை அதிகம் உட்கொள்ளுங்கள். தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு தினமும் 1800-2200 கலோரிகள் தேவைப்படும். இந்த அளவிற்கு கலோரிகள் இருந்தால் மட்டுமே குழந்தைக்கு போதிய ஊட்டச்சத்துகள் கிடைக்கும். புரதம் மற்றும் கார்போ சத்து அதிகம் கொண்ட கலவையான உணவை ஒரு நாளில் அடிக்கடி உட்கொள்ளுங்கள். இதனால் நீண்ட நேரம் ஆற்றலுடன் இருக்க முடியும். ஊட்டச்சத்துகள் இல்லாத பதப்படுத்தப்பட்ட உயர் கலோரி உணவுகளை உட்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.

உடற்பயிற்சி செய்யத் தொடங்குங்கள்

குழந்தையைப் பிரசவித்த பின்னர் உடற்பயிற்சி செய்யத் தொடங்குவதில் காலம் தாழ்த்த வேண்டாம். பொதுவாக உங்களுக்கு உடற்பயிற்சி செய்யும் வழக்கம் இல்லாமல் இருந்தால் இசை அல்லது நடனப்பயிற்சி செய்யலாம். உங்கள் குழந்தையோடு இணைந்து சில மகிழ்ச்சியான ஒர்க் அவுட்களை முயற்சியுங்கள். இதனால் உங்கள் இருவருக்கும் மகிழ்ச்சி.

எளிதான நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள்

நடப்பது என்பது ஒரு பெரிய கடினமான பயிற்சி என்று கூற முடியாது என்றாலும், குழந்தை பிரசவித்த பின்னர் நீங்கள் மேற்கொள்ள வேண்டிய பிட்னஸ் வழக்கத்தில் மிகவும் எளிமையான ஒரு வழியாக இதனை பின்பற்றலாம். முதலில் மெதுவாக நடக்கத் தொடங்குங்கள். பிறகு மெது மெதுவாக உங்கள் வேகத்தை அதிகரிக்கலாம். உங்கள் குழந்தையை தூக்கிக் கொண்டு நீங்கள் நடைப்பயிற்சி செய்வதால் இந்த எளிய பயிற்சி இன்னும் நன்மை விளைவிக்கும்.

வயிற்று பகுதியை சுருக்கி, சுவாச பயிற்சி செய்யலாம்

இந்த பயிற்சியை பலரும் செய்வதை நீங்கள் பார்த்திருக்கலாம். உங்கள் வயிற்று பகுதியை வலிமையாக்க இந்த பயிற்சி உங்களுக்கு உதவும். நேராக அமர்ந்து ஆழமாக மூச்சை உள்ளிழுத்து வெளியில் விடுங்கள். மூச்சை உள்ளிழுக்கும் போது வயிற்று பகுதியை இறுக்கமாக சுருக்கிக் கொள்ளவும். மூச்சை வெளியில் விடும்போது வயிற்று பகுதியை தளர்வாக்கிக் கொள்ளவும். வயிற்றை இறுக்கமாக பிடிக்கும் நேரத்தை மெதுவாக அதிகரிக்கவும்.

ஓமம் கலந்த தண்ணீர் பருகவும்

பிரசவத்திற்கு பிறகு அடுத்த சில வாரங்களுக்கு ஓமம் சேர்த்த தண்ணீரை பருகலாம். இதனால் உங்கள் உடல் நீர்ச்சத்தோடு இருக்கும், வயிற்று கொழுப்பும் குறையும். போதுமான அளவு தண்ணீர் பருகுவதால் உடல் எடை குறைவதில் நல்ல பலன் கிடைக்கும்.

Related posts

கர்ப்பகால அடிப்படை பரிசோதனைகள் -பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

தக்காளி காய்ச்சல் : அறிகுறி.. சிகிச்சை முறை.. தவிர்க்கும் முறை..

nathan

தூக்கமின்மையால் ஏற்படும் நோய் பாதிப்புகள் : அவதானம்…!!

nathan

பெண்களின் மாதவிடாய் கோளாறுகளை போக்கும் கருஞ்சீரகம்

nathan

செரிமானம் மற்றும் வாயு தொல்லை பிரச்சனையா..?

nathan

உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!12 நாடுகளுக்கு பரவிய குரங்கம்மை நோய்:

nathan

தெரிஞ்சிக்கங்க…நிமோனியாவால் கஷ்டப்படுறீங்களா? சீக்கிரம் குணமாக இந்த உணவுகளை சாப்பிடுங்க…

nathan

இதமான, இனிமையான குட்டித் தூக்கம்… பலன்கள், பக்கவிளைவுகள்!

nathan

தலையணையை வைத்து தூங்குபவரா நீங்கள்? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan