30.6 C
Chennai
Saturday, May 18, 2024
1637224275
ஆரோக்கிய உணவு

அன்னாசி பழத்தை அதிகமாக சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?

அன்னாசி பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.இதில் ப்ரோமெலைன், ப்ரோடீன், நார்ச்சத்து, வைட்டமின் எ, வைட்டமின் சி, பீட்டா- கரோட்டின், தையாமின், வைட்டமின் பி-5, பொட்டாசியம், கால்சியம், காப்பர், மெக்னீசியம் மற்றும் மாங்கனீஸ் சத்துக்கள் நிறைந்துள்ளது.

 

இருப்பினும் இதனை அதிகளவு எடுத்து கொள்ள கூடாது. ஏனெனில் ஒரு சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும்.

 

அந்தவகையில் அன்னாசி பழத்தினை சாப்பிடுவதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்..

 

இரத்த சர்க்கரையை ஊக்குவிக்கும் அன்னாசிப்பழத்தில் இயற்கையான சர்க்கரை அடங்கியுள்ளது. ஆனால் அது அதிகளவில் உள்ளது தான் பிரச்சனையாக இருக்கும். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு அதன் தாக்கம் நல்லதல்ல. இது இரத்தத்தில் உள்ள இன்சுலின் அளவை அதிகரித்துவிடும்.
அன்னாசி பழத்தில் ப்ரோம்லைன் உள்ளது. இது நாம் உண்ணும் சில மருந்துகளோடு சேர்ந்து கொண்டு பிரச்சனைகளை ஏற்படுத்தும். நீங்கள் ஆன்டி-பயாடிக்ஸ் மற்றும் வலிப்புத் தடுப்பு மருந்துகளை பயன்படுத்தி வந்தால், இந்த பழத்தை உட்கொள்ள வேண்டாம்.
பழுக்காத அன்னாசி பழத்தை சாப்பிட்டாலோ அல்லது ஜூஸ் போட்டு குடித்தாலோ அது ஆபத்தை ஏற்படுத்தலாம். இது நச்சுத்தன்மையை ஏற்படுத்தி விடும், கடுமையான வாந்தியையும் உண்டாக்கும்.
அன்னாசி பழத்தை அதிகமாக உட்கொண்டால் பற்களில் அதிகம் கரை ஏற்படும். இது பற்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். பற்களின் எனாமலின் மீதும் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும்.
அன்னாசி பழம் சாப்பிடுவதால் சில பெண்களுக்கும் ஆண்களுக்கும் லேசான அலர்ஜிகள் ஏற்படலாம். இதனை போக்க அன்னாசி பழ துண்டுகளை சுத்தமான உப்பு தண்ணீரில் கழுவ வேண்டும். சொறியை ஏற்படுத்தும் பழ என்சைம்களை இது நீக்கிவிடும்.
முடக்குவாதம் மற்றும் கீல்வாதம் உள்ளவர்கள் அன்னாசி பழத்தை அதிகமாக சாப்பிட வேண்டாம். அன்னாசி பழம் சாப்பிடும்போது அது இரைப்பை குடலுக்குள் செல்லும் போது ஆல்கஹாலாக மாறி விடுகிறது. இதனால் அதை உட்கொள்பவர்களுக்கு அது கீல்வாதத்தை தூண்டி விடும்.
அன்னாசி பழத்தில் அதிக அளவிலான அசிடிட்டி உள்ளது. அதனால் இதை உட்கொண்ட பிறகு வாயிலும் தொண்டையிலும் ஊறும் உணர்வு ஏற்படும். இதனால் சில பேருக்கு வயிற்று வலியும் கூட ஏற்படும். எனவே அவர்கள் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது.

Related posts

காளான் வைத்து பஜ்ஜி செய்வது எப்படி என்று பார்க்கலாம். சத்தான ஸ்நாக்ஸ்

nathan

கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கான 10 முக்கிய காரணங்கள்!!!

nathan

தெரிஞ்சிக்கங்க… பக்க விளைவுகளை ஏற்படுத்தும் பச்சை காய்கறிகள்!

nathan

திராட்சை சாறு குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்….!

nathan

உங்களுக்குதான் இந்த விஷயம் சீக்கிரம் மாரடைப்பு வந்துடும்…. இந்த உணவுகளுக்கு ‘குட்-பை’ சொல்லுங்க…

nathan

பருவ பெண்கள் அழகுடன் ஜொலிக்க என்னென்ன சாப்பிடலாம்?

nathan

7 நாட்களில் 10 பவுண்ட் அளவுக்கு எடையைக் குறைக்கும் முட்டைகோஸ் சூப்! எப்படினு தெரிஞ்சிக்கணுமா..?

nathan

பூண்டு பால்

nathan

கொழுப்பை குறைக்கும் சரியான உணவு முறை

nathan