2 tomato dal
சமையல் குறிப்புகள்

சுவையான ஆந்திரா ஸ்டைல் தக்காளி தால்

இந்தியாவில் தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக ஆந்திரா ரெசிபிக்கள் தான் சுவையாகவும், நன்கு காரமாகவும் இருக்கும். அதிலும் ஆந்திராவில் சட்னி, தால் போன்றவை தான் மிகவும் பிரபலமானவை.

இங்கு அந்த தாலில் ஒன்றான தக்காளி தால் ரெசிபியை எப்படி ஈஸியாக செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதை பேச்சுலர்கள் கூட முயற்சிக்கலாம்.

Andhra Style Tomato Dal
தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு – 1 கப்
தக்காளி – 2 (நறுக்கியது)
வெங்காயம் – 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 1 (நறுக்கியது)
கறிவேப்பிலை – சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1/4 டீஸ்பூன்
தண்ணீர் – 2 1/2 கப்
நெய் – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் துவரம் பருப்பை நன்கு கழுவி, நீரில் 15-20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம் சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 30 நொடிகள் நன்கு வதக்கி, பின் தக்காளி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், உப்பு சேர்த்து 2-3 நிமிடம் குறைவான தீயில் நன்கு வதக்கி விட வேண்டும்.

பிறகு ஊற வைத்துள்ள துவரம் பருப்பை சேர்த்து கிளறி, பின் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி தீயை அதிகரித்து, 7-8 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

விசில் போனதும் குக்கரை திறந்து, அதனை மசித்து, வாணலியில் ஊற்றி அடுப்பில் வைத்து, 1 கப் தண்ணீர் ஊற்றி, மிதமான தீயில் 5-7 நிமிடம் கொதிக்க விட்டு, உப்பு சுவை பார்த்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், ஆந்திரா ஸ்டைல் தக்காளி தால் ரெடி!!!

Related posts

ஸ்பெஷல் மாங்காய் பச்சடி

nathan

ப்ளாக் பெப்பர் சிக்கன் ப்ரை

nathan

சுவையான சாஃப்ட் சப்பாத்தி

nathan

சப்பாத்தி லட்டு

nathan

சுண்டைக்காய் மகத்துவம்..!

nathan

கோபி மஞ்சூரியன் ரெசிபி

nathan

சுவையான கத்திரிக்காய் பக்கோடா

nathan

சுவையான ஆப்பம்… இப்படி அரிசி அரைச்சு சுடுங்க!

nathan

படியுங்க எந்தெந்த பொருள்களை ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாது தெரியுமா…?

nathan