ஆரோக்கியம் குறிப்புகள்

ஆண்களின் விந்தணு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்

இன்றைய இளம் ஆண்கள் பெரிதும் கவலைக் கொள்ளும் ஓர் விஷயம் தான் விந்தணு குறைவாக உற்பத்தி செய்யப்படுவது. உலகில் 90 சதவீத ஆண்கள் போதிய அளவு விந்தணு உற்பத்தி செய்யப்படாமல், குழந்தையைப் பெற்றெடுக்க உதவ முடியாமல் கஷ்டப்படுவதாக புதிய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

இப்படி விந்தணு உற்பத்தி குறைபாடு ஏற்படுவதற்கு முக்கிய காரணம் உண்ணும் உணவுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் தான். குறிப்பாக இக்கால ஆண்கள் அதிகமாக வெளியிடங்களில் உணவுகளை உட்கொள்வதால், விந்தணு உற்பத்திக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல், விந்தணு உற்பத்தி குறைபாடு ஏற்படுவதோடு, உற்பத்தி செய்யப்படும் விந்தணுவும் தரமானதாக இருப்பதில்லை.

இப்பிரச்சனைக்கு எப்படி உணவுகள் காரணமாக உள்ளதோடு, அதேப் போல் உணவுகளைக் கொண்டே இப்பிரச்சனைக்கு தீர்வு காணலாம்.

பூண்டில் அல்லிசின் என்னும் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் கலவை உள்ளது. எனவே பூண்டை ஆண்கள் உட்கொள்ளும் போது, இனப்பெருக்க உறுப்புக்களில் இரத்த ஓட்டம் அதிகரித்து, விந்தணு உற்பத்தி அதிகரிப்பதோடு, அதன் சக்தியும் உயரும்.

வால்நட்ஸ் ஆண்களுக்கு மிகவும் நல்லது. வால்நட்ஸில் ஆண்களின் விந்தணு உற்பத்தி மற்றும் தரத்தை அதிகரிக்கும் அர்ஜினைன் வளமாக நிறைந்துள்ளது. மேலும் இதில் உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்கும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டும் உள்ளது.

ஆண்கள் தினமும் குறைந்தது ஒரு முட்டையை உட்கொண்டு வந்தால், இனப்பெருக்க உறுப்புக்களில் உள்ள திசுக்கள் அழிவதைத் தடுத்து, விந்தணுவின் எண்ணிக்கையை உயர்த்தலாம். Show Thumbnail

ஆண்கள் தினமும் மாதுளை அல்லது மாதுளை மில்க் ஷேக்கை குடித்து வருவது நல்லது. இதற்கு மாதுளையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், விந்தணுக்கள் பாதிக்கப்படுவதைத் தடுத்து, நல்ல பாதுகாப்பு வழங்கும். மேலும் மாதுளை விந்தணுவின் தரத்தையும் அதிகரிக்கும்.

கடல் சிப்பியில் ஜிங்க் அதிகம் உள்ளது.

ஆண்களின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவையும், விந்தணுவின் உற்பத்தியையும் அதிகரிப்பதில் ஜிங்க் சத்து மிகவும் முக்கிய பங்கினை வகிக்கிறது. எனவே விந்தணு குறைபாடு உள்ள ஆண்கள் கடல் சிப்பியை தொடர்ந்து உணவில் சேர்த்து வர, உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரித்து, விந்தணுக்கள், பாலுணர்ச்சி மற்றும் உடலின் ஆற்றல் அதிகரிக்கும்.

1

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button