தலைமுடி சிகிச்சை

கூந்தலுக்கு உகந்த உருளைக்கிழக்கு குளியல் பவுடர்

சமையலில் ருசியைக் கூட்டுகிற ஐட்டம் உருளைக்கிழங்கு என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். உங்களை அழகுபடுத்தும் மந்திரமும் உருளைக்கிழங்கில் இருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்? உருளைக்கிழங்கின் தோலை நீக்கி, பொடியாக நறுக்கி வெயிலில் மொறுமொறுப்பாகக் காய வைத்து, பவுடராக்கிக் கொள்ளுங்கள்.

இந்த உருளை ஸ்டார்ச் பவுடர், ஒரு அற்புதமான அழகுக் கலை நிபுணர்! உருளைக்கிழங்கில் உள்ள ஸ்டார்ச், தோலை மிருதுவாக்கி, கூந்தலை பளபளப்பாக்கும்.

* கண்களுக்குக் கீழ் இருக்கும் கருமையைப் போக்குவதில் உருளைக்கிழங்குக்கு நிகர் வேறில்லை. 50 கிராம் உருளை ஸ்டார்ச் பவுடருடன், 10 கிராம் பார்லி பவுடரை கலந்து கொள்ளுங்கள். இதிலிருந்து ஓரு டீஸ்பூன் எடுத்து, மசித்து வாழைப்பழம் ஒரு டீஸ்பூன் கலந்து கண்களைச் சுற்றிப் பூசுங்கள். இதைத் தொடர்ந்து செய்தால் கண்களுக்குக் கீழ் இருக்கும் கருமை மறையும்.

* முகத்தை ப்ளீச் செய்தது போல பளிச்சென்று மாற்றும் சக்தி உருளைக்கிழங்குக்கு உண்டு. ஸ்டார்ச் பவுடர் 50 கிராமுடன் 200 கிராம் பார்லி பவுடரைக் கலந்து கொள்ளுங்கள். இதிலிருந்து 2 டீஸ்பூன் எடுத்து, பால் கலந்து முகத்தில் பேக் ஆகப் போட்டுக் கழுவுங்கள். முகம், அன்று மலர்ந்த தாமரையாக ஜொலி ஜொலிக்கும்.

* சிலருக்கு பாதம், நகங்களில் வெடிப்பு ஏற்பட்டிருக்கும். சிலருக்கு கழுத்து, முழங்கை, மூட்டுப் பகுதிகள் கருத்து, தோலும் முரடுதட்டிப் போயிருக்கும். இதற்கு ஒரு டீஸ்பூன் உருளை ஸ்டார்ச் பவுடர், அரை டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் இரண்டையும் கலந்து, வெடிப்பு, கருமை படர்ந்த இடங்களில் பூசுங்கள். வெடிப்பு மறையும். கருமையும் காணாமல் போகும்.

* உருளை ஸ்டார்ச் பவுடர், கஸ்தூரி மஞ்சள், பயத்தமாவு. மூன்றையும் ஒரே அளவு எடுத்து, கலந்து, குளியல் பவுடராகப் பயன்படுத்துங்கள். உடலைக் குளிர்ச்சியாக்கி, புத்துணர்வை அள்ளித் தரும் ஸ்நானப் பொடி இது.

* நான்கு சீயக்காய்களை முந்தைய நாள் இரவே வெந்நீரில் ஊற வையுங்கள். மறுநாள், இந்த சீயக்காய்களுடன் 4 செம்பருத்தி இலை, 2 டீஸ்பூன் உருளை ஸ்டார்ச் பவுடரை சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதைத் தலையில் தேய்த்துக் குளியுங்கள். உடல் சூடு தணிவதுடன் தலையும் சூப்பர் சுத்தமாகிவிடும்.
* கூந்தல் பளபளவென மின்ன வேண்டுமா? பூந்திக் கொட்டை, காய்ந்த செம்பருத்தி இலை. வெந்தயம், பயத்தம் பருப்பு, உருளை ஸ்டார்ச் பவுடர். இவற்றை தலா கால் கிலோ எடுத்து மெஷினில் கொடுத்து பவுடராக்குங்கள். வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து இந்தப் பவுடரைப் போட்டு அலசுங்கள். கூந்தல் பட்டுப்போல மின்னும்.

* அரை கிலோ வெந்தயத்துடன், உருளை ஸ்டார்ச் பவுடர், பூலான் கிழங்கு, சீயக்காய் மூன்றையும் தலா 100 கிராம் சேர்த்து, வெட்டிவேர் 10 கிராம் கலந்து சீயக்காய் மெஷினில் அரைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பவுடரை வாரம் இருமுறை தலைக்குத் தேய்த்து அலச, வறண்ட கூந்தல் மிருதுவாகும்.13859 tips merawat rambut sebelum tidur

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button