பொதுவானகைவினை

குரோஷா கைவினைப் பொருட்கள்

கைவினைப் பொருட்கள் செய்யறது கைகளுக்கு மட்டுமான பயிற்சி இல்லை. மனசுக்கும் ஆரோக்கியம் கூட்டற விஷயம். தன்னாலயும் ஒரு சுயதொழிலை செய்ய முடியும்கிற தன்னம்பிக்கையை அதிகரிக்கும்” என்கிறார் ஏஞ்சலின் ப்ரின்ஸ். சென்னை அண்ணாநகரை சேர்ந்த இவர், மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் ஒர்க்கில் சமூகப்பணி தொடர்பான படிப்பை முடித்துவிட்டு, தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்துகிறார்.

மனநலம் பாதிக்கப்பட்டவங்களுக்கும் போதை அடிமைகளுக்கும் மறுவாழ்வு கொடுத்து அவங்க உடல் மற்றும் மன ஆரோக்கியத்துக்கு உதவற வேலைகளை எங்க அமைப்பு மூலமா செய்யறோம். அதுல ஒண்ணுதான் அவங்களுக்கான கைவினைக் கலைப் பயிற்சி. பிளாக் பிரின்டிங், புடவை டிசைனிங்னு நிறைய சொல்லிக் கொடுக்கறேன். அதுல முக்கியமானது குரோஷா வேலைப்பாடு. குரோஷா பின்னல் கத்துக்க மனசு ஒருநிலைப்படணும். கவனம் சிதறக்கூடாது.

மனநலம் பாதிக்கப்பட்டவங்களுக்கு மட்டுமல்ல… மத்தவங்களுக்குமே இது ரொம்ப நல்ல பயிற்சி. குரோஷா பின்னல் முறையில பிறந்த குழந்தைங்களுக்கான பூட்டிஸ், தொப்பி, செல்போன் பவுச், ஹேண்ட்பேக், பிரேஸ்லெட், கொலுசுனு நிறைய பண்ணலாம். உல்லன் நூல், குரோஷா ஊசி மட்டும்தான் மூலதனம். ஒரு பந்து உல்லன் நூல் 12 ரூபாய்க்கு கிடைக்கும். அதுல ஒரு ஜோடி பூட்டிஸ் பின்னலாம். அதை 150 ரூபாய்க்கு விற்கலாம். எதிர்பார்க்க முடியாத அளவுக்கு லாபம் கிடைக்கும்.
ld3743
பொறுமையும் கிரியேட்டிவிட்டியும்தான் இதுல முக்கிய மூலதனங்கள். வெளிநாடுகள்ல இந்த உல்லன் தயாரிப்புகளுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கு. நம்மூர்லயும் அடுத்து வரப்போறது குளிர்காலம்கிறதால உல்லன் தயாரிப்புகளுக்கு டிமாண்ட் அதிகமாகும்” என்கிற ஏஞ்சலின் 2 நாட்கள் பயிற்சியில் அடிப்படையான குரோஷா பின்னல் முறைகளையும், அதை வைத்து 6 வகையான உல்லன் தயாரிப்புகள் செய்யவும் கற்றுத் தருகிறார். தேவையான பொருட்களுடன் சேர்த்துக் கட்டணம் 1,000 ரூபாய்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button