மருத்துவ குறிப்பு

கர்ப்பப்பையை அகற்றுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள் -தெரிந்துகொள்ளுங்கள் !

மாதவிடாய் சுழற்சி என்பது பெண்கள் அனைவரும் வாழ்வில் சந்திக்க கூடிய ஒன்று. அது பெண்கள் பருவமடைந்தது முதல் துவங்கி மாதம் ஒரு முறை ஏற்படக் கூடியது. அந்த சமயத்தில் பெண்களுக்கு வயிற்று வலி மட்டும் வயிற்று பிடிப்பு ஏற்படுவதுடன் மனநிலை மாற்றமும் ஏற்படும். இது பெண்களுக்கு பெண்கள் மாறுபடக் கூடியது.

மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் அசௌகரியம் மாதவிடாய் ஏற்படாமல் இருந்தால் நன்றாக இருக்குமே எனத் தோன்றும். ஆனால், அவ்வாறு மாதவிடாய் ஏற்படவில்லை எனில் அது பலவிதமான உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும். தற்போதைய காலத்தில் கர்ப்பப்பையை அகற்றுவது சாதாரண ஒன்றாக மாறிவிட்டது. இங்கு கர்ப்பப்பையை நீக்குவதால் ஏற்படும் பக்கவிளைவுகளை பார்க்கலாம்.

குணமடைய நீண்ட காலம் எடுக்கும்

பொதுவாக கருப்பை அகற்றும் முறையில் இந்த வகையான பக்கவிளைவுகள் அதிகம் காணப்படுகின்றன. குறிப்பாக இந்த அறுவை சிகிச்சை நீளவாக்கில் வெட்டி செய்யப்படும். சில நேரத்தில் எதிர்பாராத குறுக்கில் வெட்டி அறுவைசிகிச்சை செய்யும் போது கருமுட்டை மற்றும் கருக்குழாய் போன்றவற்றை உடலில் நீக்கும் நிலை ஏற்படும். இந்த அறுவைசிகிச்சை முடிந்த ஒரு சில வாரங்கள் படுக்கையிலேயே இருக்க வேண்டும். மேலும் இந்த காயம் குணமடைய நீண்ட காலம் எடுத்துக் கொள்ளும். ஒரு சிலருக்கு காயம் குணமடைய மாதக் கணக்கிலும், சிலருக்கு வருடக்கணக்கிலும் எடுத்துக் கொண்டிருக்கிறது.

அந்தரங்க பகுதி அறுவைசிகிச்சை

கருப்பை நீக்கும் அறுவைசிகிச்சையில் இந்த முறையும் பக்கவிளைவை ஏற்படுத்தும். இந்த முறையில் மருத்துவர் கருப்பையை அந்த பகுதி வழியாக நீக்குவார். மனிதர்களில் அந்தரங்கப் பகுதி மிகவும் மென்மையானது. இந்த முறை அறுவை சிகிச்சையில் மருத்துவர் முறையான கவனம் எடுக்கவில்லை எனில், அது அந்தரங்க பகுதியில் நீண்ட காலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

இரத்த சோகை ஏற்படும் வாய்ப்புள்ளது

இயற்கைக்கு மாறாக கருப்பையை நீக்கும் போது, அறுவை சிகிச்சையின் போதும் மற்றும் அதன் பின்னும் அதிகப்படியான இரத்த இழப்பை ஏற்படுத்தும். இப்படி அதிகப்படியான இரத்த இழப்பு ஏற்படுவது இரத்த சோகையை ஏற்படுத்தும். சில நோயாளிகளின் விஷயத்தில், இந்த வகை அறுவை சிகிச்சையானது இரத்த கட்டிகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த இரத்த கட்டிகள் பெரும்பாலும் கால் மற்றும் நுரையீரல் போன்ற முக்கியமான பகுதிகளில் கர்ப்பபை அறுவைசிகிச்சையின் பக்கவிளைவால் ஏற்படுகிறது.

புற்றுநோய்க்கான அபாயத்தை அதிகரிக்கிறது

இந்த பக்க விளைவு லேபராஸ்கோபிக் அறுவைசிகிச்சை விஷயத்தில் காணப்படுகிறது, இது கருப்பை திசுக்களை உடைப்பதற்காக மார்க்செலேட்டர் சக்தியை பயன்படுத்துகிறது, அதேபோல் லேபராஸ்கோபிக் முறையில் நீக்கும் கருப்பையில் காயம் ஏற்படும். அதே சமயம் எதிர்பாராத விதமாக புற்றுநோய் செல்கள் உடல் முழுவதும் பரப்பப்படலாம்.

[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

வலி

எல்லா கர்ப்பப்பை நீக்கும் அறுவைசிகிச்சை முறையிலும் வலி இருந்தே தீரும். ஒவ்வொன்றிற்கும் எடுக்கும் கால அளவைப் பொறுத்து வலியின் அளவு மாறுபடும். அறுவைசிகிச்சை முறையில் உடலில் இருந்து சில உறுப்புகள் நீக்கப்பட்டாலும் அவை கருப்பை அறுவைசிகிச்சை அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. இது குணமடைய ஒரு மாத காலத்திற்கு மேலும் ஏற்படலாம். இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு வலி இருப்பதாக பல பெண்கள் கூறுகின்றனர். இதில் லேபராஸ்கோபிக் அறுவைசிகிச்சை முறையே குறைவான வலியைத் தரக்கூடியது.

மயக்க மருந்திலிருந்து பிரச்சனை

குணமடையும் காலத்தில் வலி என்பது இருக்க கூடிய ஒன்று தான். அறுவைசிகிச்சையின் போது வலியை சமாளிக்க மயக்க மருந்து கொடுக்கப்படும். இது சில பெண்களுக்கு சுவாசப் பிரச்சனை மற்றும் இருதய கோளாறுகளை ஏற்படுத்துகிறது. இது குறிப்பாக ஆஸ்துமா உள்ள பெண்களுக்கும், 50 வயதை கடந்த பெண்களுக்கும் ஏற்படுகிறது.

தொற்றுநோய்

இந்த அறுவைசிகிச்சையில் உடலின் உள்ளுறுப்புகளில் தொற்றுநோய் ஏற்படும் வாய்ப்புள்ளது. இந்த நோய் தொற்று பல உடல்நல பாதிப்புகளை உடனடியாக ஏற்படுத்தும். மருத்துவரும் மருத்துவ குழுவும் என்னதான் கவனம் எடுத்து பார்த்துக் கொண்டாலும், நோயாளியின் உடலில் ஏற்படும் சில ஒவ்வாமை ஆபத்துக்கு வழிவகுக்கும்.

உள்ளுறுப்புகளில் காயம்

மனித உடல் ஒரு விசித்திரமான இயந்திரம். அதில் பல உடல் உறுப்புகள் குறைவான இடத்தில் இருக்கும். அதிலும் பெண்ணின் கருப்பையை சுற்றி கருக்குழாய், குடல் மற்றும் இடுப்பு எலும்பு போன்ற உறுப்புகள் இருக்கின்றன.உடலில் இருந்து கருப்பையை நீக்கும் போது அருகில் உள்ள உறுப்புகளில் காயம் ஏற்படுவதற்கான அபாயம் அதிகம். அப்படி ஏற்படும் காயத்தின் தன்மையை பொறுத்து குணமைடைய நீண்ட அல்லது குறுகிய காலம் எடுத்து கொள்ளும்.

 

9. உடலுறவின் போது வலி

இந்த பக்கவிளைவு பொதுவாக ஏற்படக் கூடிய ஒன்றல்ல. சில பெண்களுக்கு கருப்பை நீக்க அறுவைசிகிச்சை செய்து கொண்ட பின் உடலுறவில் வலி ஏற்பட்டிருக்கிறது. இது அடிவயிற்றில் அதிக வலி அல்லது வயிற்று பிடிப்பு போன்றவற்றை உணர செய்யும். நீங்க அது போல் உணர்தல் மருத்துவரின் ஆலோசனையை பெற வேண்டியது அவசியமாகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button