கை வேலைகள்பொதுவானகைவினை

OHP சீட்டில் ஓவியம்

image0031as

தேவையான பொருட்கள்:

  • OHP சீட்
  • டிசைன் பேப்பர்
  • glass கலர் (பச்சை, அரக்கு, ராமர், ரோஸ், சிவப்பு, ஆரஞ்சு)
  • பிரஸ்
  • கருப்பு கலர் outline tupe

 

செய்முறை:

  • முதலில் OHP சீட்டிற்கு கீழ்புறம் டிசைனை வைத்து கருப்பு கலர் outline tupe கொண்டு வரையவும். வரையும் போது இடைவெளி இருக்கக்கூடாது. ஏனென்றால் கிளாஸ் கலர் தண்ணீர் போல் இருக்கும்… இடைவெளி இருந்தால் அதன் மூலம் வெளியே வந்து விடும்…
  • பின்பு 1மணிநேரம் காயவிடவும்.

image0037

  • பறவைக்கு இறகு பக்கம் முதலில் ராமர் கலரை அடித்துவிட்டு உடம்பு முழுதும் ரோஸ் கலரை பிரஸ் துணைக்கொண்டு அடிக்கவும். இரண்டு கலர் சேரும் இடத்தில் கலந்து விடவும்.

image0038j

  • மரத்தின் காம்பிற்கு அரக்கு கலரையும், இலைகளுக்கு மஞ்சள், பச்சையும் மிக்ஸ் செய்து அடிக்கவும்.

image0040g

  • பூவின் நடுப்பகுதியில் சிவப்பு கலரையும் ஆரஞ்சு கலரையும் மிக்ஸ் செய்து அடிக்கவும். இதழுக்கு மஞ்சள் கலரை அடிக்கவும்.
  • பின்பு நன்றாக நிழலில் ஒரு நாள் முழுவதும் காயவிடவும்…

image0031framed

  • பின்பு அழகான வடிவத்தில் frame செய்து கொள்ளலாம்…
  • அழகான OHP ஓவியம் தயார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button