சிற்றுண்டி வகைகள்

புழுங்கல் அரிசி முறுக்கு

முறுக்கு பச்சரிசியில் தான் செய்வது வழக்கம். ஆனால் புழுங்கல் அரிசியுலும் முறுக்கு செய்யலாம். டேஸ்ட் சூப்பராக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

புழுங்கல் அரிசி – 2 கப்
பொட்டுக்கடலை – 1/4 கப்
காய்ந்த மிளகாய் – 8
தேங்காய்ப்பால் – ஒரு கப்
எள் – கொஞ்சம்
ஓமம் – சிறிது
உப்பு – தேவைக்கு
கடலை எண்ணெய் பொரிக்க தேவையான அளவு

செய்முறை:
1449665903 8166
அரிசியை நீரில் நன்றாக ஊறிய பிறகு கழுவிவிட்டு கிரைண்டரில் போட்டு, அதனுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து, தேங்காய்ப்பால் விட்டு அல்லது தண்ணீர் தெளித்து மைய அரைக்க வேண்டும். மிகவும் கெட்டியாக இருக்க வேண்டும். பொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு நல்ல மாவாக இடித்துக் கொள்ளவும்.

இப்போது அரிசி மாவுடன் பொட்டுக்கடலை மாவு, எள், ஓமம், பெருங்காயம், உப்பு சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும். மாவு கெட்டியாக இல்லாமல் இருந்தால் பேப்பர் டவலில் அல்லது ஒரு காட்டன் துணியில் சிறிது நேரம் சுருட்டி வைத்தால் ஈரம் போய்விடும்.

இப்போது வாணலியில் எண்ணெய் ஊற்றி காய வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும் விருப்பமான முறுக்கு அச்சைப் பயன்படுத்தி, பிசைந்த மாவில் ஒரு பெரிய எலுமிச்சை அளவு எடுத்து ஒரு பேப்பர் டவலில் முறுக்குகளாக பிழிந்து கொள்ளவும்.

எண்ணெய் காய்ந்ததும் ஒவ்வொன்றாக எடுத்துப் போட்டு, இருபுறமும் சிவக்கவிட்டு நன்றாக வெந்ததும் எடுக்கவும். இப்போது புழுங்கலரிசி முறுக்கு தயார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button