இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடிப்பில் உருவாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த படம் இறுதி சுற்று. இப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் ரித்திகா சிங்.
குத்துசண்டை வீராங்கனையாக இருந்த இவரை வைத்து இறுதி சுற்று படத்தினை எடுத்து மிகப்பெரிய ஹிட் கொடுத்தார். இப்படத்திற்கு பிறகு ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மைக்கடவுளே போன்ற படங்களில் நடித்து நல்ல வரவேற்பு பெற்றார்.
தற்போது பாக்சர், பிச்சைக்காரன் 2, வனங்காமுடி, கொலை போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். கமிட்டாகி படத்தின் ஷூட்டிங்கினை முடித்துவிட்ட ரித்திகா இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு வருவார்.
அப்படி சமீபத்தில் டேய் என்ற ஆல்பம் பாடலுக்கு ஐட்டம் பாடல் மாதிரியான குத்தாட்டத்தை போட்டுள்ளார். இதுவரையில்லாத அளவிற்கு ரித்திகா சிங் இப்பாடலில் ஆடியதை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.