தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக 80களில் பிரபலமானவர் இயக்குனர் சங்கீதா கிருஷ்ணா. சங்கீதனா படத்தின் மூலம் அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களையும் இயக்கி வந்தார். தமிழில், நிமிடங்கள் என்ற படத்தினையும் இயக்கியிருக்கிறார்.
சமீபத்தில் இவர் அளித்த பேட்டியொன்றில் நடிகைகள் வாய்ப்பிற்காக படுக்கையை பகிரக்கூட தயாராகி இருக்கிறார்கள். தற்போதைய காலக்கட்டத்தில் முன்னணி நடிகைகள் கூட இதை செய்து வருகிறார்கள்.
இதை எதிர்த்து தான் நடிகை ஸ்ரீரெட்டி குரல் கொடுத்து வந்தார். இதனால் பல நடிகைகள் பாலியல் அத்துமீரல்கள் பற்றி பேசி வருகிறார்கள். குறிப்பாக தெலுங்கு சினிமாவில் இதுபோன்று பல ஆண்டுகளாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
30 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய ஒரு இயக்குனர் இப்படியொரு உண்மையை பகிர்ந்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.