நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் சின்ன சின்ன மேடைகளாக தனது திறமையை வெளிக்காட்டி வந்தவர். மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு நன்கு பரீட்சயப்பட்ட நபராக மாறினார்.
அங்கு இருந்து விஜய் டிவி பக்கம் வந்த சாண்டி ஏராளமான நிகழ்ச்சிகளுக்கு நடன இயக்குனராக இருந்து கலக்கினார். சில நடன நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்து வந்தார்.
தற்போது படங்களிலும் நடிகர்களுக்கு நடன இயக்குனராக இருந்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் பட பாடல்களுக்கு சாண்டி நடன இயக்குனராக இருந்துள்ளார்.
விழா மேடையில் கமல்ஹாசன் சாண்டி பணியை பாராட்டி பேசியதை நாம் பார்த்திருப்போம்.
தனது மகளின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய நடய இயக்குனர் சாண்டி- அழகி புகைப்படங்கள்
திருமணம்
சாண்டிக்கு முதல் திருமணம் தோல்வியில் முடிய இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். இப்போது அவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். அண்மையில் சாண்டி தனது மகளின் 4வது பிறந்தநாளை கோலாகலமாக கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
அந்த புகைப்படங்களை சாண்டியின் மனைவி இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.
View this post on Instagram