மருத்துவ குறிப்பு

பெண்களுக்கு வரும் மூட்டு வலியும்… வீட்டு வைத்தியமும்…!தெரிந்துகொள்ளுங்கள் !

பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகு ஏற்படும் கால்சியம் குறைபாடு காரணமாக எலும்பு தேய்மானம் ஆவதால் மூட்டு வலி உண்டாகலாம்.

இன்றைக்கு 40 வயதைத் தாண்டியவர்கள் பலரையும் பாடாகப்படுத்தும் பிரச்சனை, முழங்கால் மூட்டுவலி. சிலருக்கு இது பெரிய பாதிப்பை உண்டாக்கி, மூட்டு மாற்று அறுவைசிகிச்சை வரை கொண்டுபோய் விடுவதும் உண்டு. மூட்டுகளுக்கு வலுசேர்க்கும் உணவுகளை உட்கொள்வது, உடற்பயிற்சி செய்வது என இவற்றை ஆரோக்கியமாக வைத்திருந்தால், இந்த வலியைத் தவிர்த்துவிடலாம். மூட்டுகள் உறுதிக்கு உதவும் 10 உணவுகள் இங்கே…

மனித எலும்புகளின் கட்டமைப்பில் எலும்புதான் உடலுக்கு வடிவமும் பலமும் அளிக்கிறது. பிறக்கும்போது 300 எலும்புகளாக இருக்கும் இவை, வயது கூடக் கூட 206-ஆகக் குறைகின்றன.

பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகு ஏற்படும் கால்சியம் குறைபாடு காரணமாக எலும்பு தேய்மானம் ஆவதால் மூட்டு வலி உண்டாகலாம்.

உடல் எடை அதிகமாக உள்ளவர்களுக்கு மூட்டுகளில் ஏற்படும் அதிக அழுத்தம் காரணமாக மூட்டு வலி ஏற்படலாம்.

அதிகம் நேரம் உட்கார்ந்து வேலை செய்வது அல்லது அதிக நேரம் உட்கார்ந்து இருப்பது.

உடலுழைப்பு இல்லாதது மற்றும் உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது .

உணவில் அதிகமாக புளிப்பு சுவையை சேர்ப்பது.

மூட்டு வலி நீங்க வீட்டு வைத்தியம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன…

ஆப்பிள் சைடர் வினிகர்

ஆப்பிள் சைடர் வினிகரில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன, அவை மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெற உதவும். ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சைடர் வினிகரை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து காலையில் குடிக்கலாம்.

இஞ்சி சாறு

இஞ்சியில் ஜின்ஜெரோல் எனப்படும் ஒரு கலவை நிரம்பியுள்ளது, இது இயற்கையில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்டது. முழங்கால் வலியிலிருந்து நிவாரணம் பெற நீங்கள் இஞ்சி தேநீர் தயாரித்து தினமும் இரண்டு முறை குடிக்கலாம்.

இஞ்சி தேனீர்: ஒரு சிறிய இஞ்சி துண்டை ஒரு கிளாஸ் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அதனுடன் சம அளவு தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம்.

எப்சம் உப்பு

எப்சம் உப்பில் மெக்னீசியம் சல்பேட் உள்ளது, இவை ஒரு வலி நிவாரணி ஆகும். இது வீக்கத்தைக் குறைத்து வலியைக் குறைக்கிறது. ஒரு பக்கெட் குளியல் நீரில் ஒரு ஸ்பூன் எப்சம் உப்பை வைத்து அதில் கால்களை 15-20 நிமிடங்கள் ஊற வைக்கலாம்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

கற்பூரம் எண்ணெய்

கற்பூரம் பொடி கலந்த எண்ணெய் மூட்டு வலியை குறைக்கிறது. மூட்டுகளில் ஏற்படும் சிரமத்தை நீக்குகிறது, கற்பூர எண்ணெயைத் தயாரிக்க ஒரு கப் சூடான (இதமான சூட்டில்) தேங்காய் எண்ணெயில் ஒரு டீஸ்பூன் கற்பூரப் பொடியைச் சேர்க்கவும். வலி உள்ள இடத்தில் ஒரு நாளைக்கு இரண்டு முறை இதை மசாஜ் செய்யவும்.

மஞ்சள்

மஞ்சள்: ஒரு சக்திவாய்ந்த ஆண்டிசெப்டிக் கலவை என்று அறியப்படும் மஞ்சள் குர்குமின் கொண்டிருப்பதால் வலியைக் குறைக்க உதவுகிறது. ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூளை தண்ணீரில் கலந்து பேஸ்ட் செய்து பாதிக்கப்பட்ட முழங்காலில் தினமும் இரண்டு முறை தடவவும்.

ஐஸ் கட்டி

ஐஸ் கட்டிகளைப் ஒரு துணியில் சுற்றி முழங்காலில் வலி உள்ள இடத்தில் ஒரு பத்து நிமிடங்கள் ஒத்திடம் கொடுக்கலாம், இவ்வாறு செய்வது வலியைக் குறைப்பது மட்டுமல்லாமல், முழங்கால்களில் வீக்கத்தையும் குறைக்கிறது.

மேலே கொடுக்கப்பட்டுள்ள எந்த முறைகளை பயன்படுத்துவதாக இருந்தாலும் உங்கள் குடும்ப மறுத்துவரிடம் ஆலோசனை பெறவும்.-News & image Credit: maalaimalar

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button