ஆரோக்கியம் குறிப்புகள்

பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் புற்றுநோய் வரும்

‘ஹோட்டலில் பேக் செய்து தரப்படும் பிளாஸ்டிக் கவர்கள் மிகவும் மட்டமான பிளாஸ்டிக்கை சேர்ந்தவை. சூடாகவோ, மிதமான சூடாகவோ உணவை பிளாஸ்டிக் கவரால் பேக் செய்தால் பிபிஏ என்ற கெமிக்கல் அதிக அளவில் வெளிவந்து உணவுடன் கலந்துவிடும்.

தொடர்ச்சியாக பல ஆண்டுகள் வரை பிளாஸ்டிக் கவரிலோ, பாத்திரங்களிலோ சாப்பிட்டு வந்தால், புற்றுநோய் வர வாய்ப்புகள் அதிகம். அதுபோல பிளாஸ்டிக் பாட்டிலை பல ஆண்டுகள் பயன்படுத்தினாலும் புற்றுநோய் வர வாய்ப்புகள் உள்ளன. பிளாஸ்டிக் கெமிக்கல்ஸ் உடலில் சேரும்போது ஹார்மோன்களின் இயக்கத்தில் மாற்றம் உண்டாகும்.

பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் அதிக அளவில் சுரந்து மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் வர வாய்ப்புகள் உண்டு. ஆண்களுக்கு எனில் ப்ராஸ்டேட் புற்றுநோய் வரலாம். அவெனில் சூடு செய்யும்போது பிளாஸ்டிக் கெமிக்கல்ஸ் அதிக அளவில் உணவுவோடு கலக்கிறது, இதனால் ரத்தப் புற்றுநோய் வர வாய்ப்புகளும் அதிகம்.

சூடு செய்யாமல் லன்ச் பாக்ஸ் போல உணவை எடுத்து சென்றாலும், தொடர்ந்து பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துகிறோம் என்பதால் மெல்ல மெல்ல பிளாஸ்டிக் கெமிக்கல்ஸ் உணவுடன் கலக்கும். ஆகவே, எந்த வகைகளிலும் பிளாஸ்டிக்கைத் தவிர்ப்பது நல்லது.
201508152232570785 Banned Plastic products The seizure of 1 ton Municipal SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button