தலைமுடி சிகிச்சை

நரைமுடி, கூந்தல் உதிர்வை தடுக்க சீகைக்காய் போட்டு குளிக்க

வாரம் ஒருமுறை சீகைக்காயைக் கொண்டு தலைமுடியை அலசினால், தலையில் ஏற்படும் பல பிரச்சனைகள் விலகும். சீகைக்காயைக் கொண்டு வாரம் ஒருமுறை தலைமுடியை தேய்த்து குளித்து வந்தால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

* சீகைக்காய் கொண்டு தலைமுடியை பராமரித்து வந்தால், நரைமுடி தடுக்கப்படும். அதற்கு நெல்லிக்காய், சீகைக்காய் மற்றும் பூந்திக் கொட்டையை ஒன்றாக அரைத்து, தலையில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் நீரில் நன்கு தேய்த்து அலச, முடிக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, நரைமுடி மறைய ஆரம்பிக்கும்.

* பொடுகுத் தொல்லையால் கஷ்டப்படுபவராயின் சீகைக்காய் கொண்டு தலைமுடியை அலசுங்கள். இதனால் சீகைக்காயில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு மற்றும் ஆன்டி-பாக்டீரியல் தன்மை ஸ்கால்ப்பில் ஏற்பட்ட நோய்த்தொற்றுக்களை நீக்கி, பொடுகுத் தொல்லையில் இருந்து விடுதலை அளிக்கும்.

* சீகைக்காயைக் கொண்டு தலைமுடியைப் பராமரித்து வருபவர்களுக்கு தலைமுடி உதிர்வது குறைவதோடு, முடியின் வலிமையும் அதிகரிக்கும். மேலும் சீகைக்காய் தலைமுடி உடைவதைத் தடுக்கும். ஆகவே உங்களுக்கு தலைமுடி உதிரும் பிரச்சனை இருந்தால் சீகைக்காயைக் கொண்டு முடியைப் பராமரியுங்கள்.

* சீகைக்காய் மயிர்கால்களின் வலிமையை அதிகரிக்கும் திறன் கொண்டது. மேலும் இது தலைமுடியின் வளர்ச்சியையும் தூண்டும். எனவே உங்களுக்கு தலைமுடி வளர வேண்டுமானால், ஷாம்பு கொண்டு தலைமுடியை அலசாமல், சீகைக்காய் பயன்படுத்தி தலைமுடியை அலசுங்கள்.
f0b786a2 55c2 47ea b912 1bbd1fbe77ed S secvpf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button