கூந்தல் பராமரிப்புதலைமுடி சிகிச்சை

தலைமுடி நரைப்பதைத் தடுக்க முடியும்..

hair-oilபெண்கள் மற்றும் குழந்தைகளுக்கிடையே இளம் வயதிலே வயது முதிர்வுப் பிரச்னை வேகமாகப் பரவி வருகிறது. அழகு சாதனப் பொருள்களுக்கு அடிமையாவதன் மூலம் பெண்களுக்கு முடி நரைத்தல் ஆகிய பிரச்னைகள் தோன்றுகின்றன. இதிலிருந்து விடுபட வழி இருக்கிறதா? அதற்கு முன் அதற்கான காரணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

இளம் வயதில் வயது முதிர்வு பிரச்னை தோன்றுவதற்கான காரணங்கள்:-

உடலில் அடிப்படையாக வாதம், பித்தம் ஆகியவை அதிகரிப்பதன் மூலம்தான் இளம் வயது முதிர்வு பிரச்னை வருகிறதென ஆயுர்வேதம் கூறுகிறது.

உலர்ந்துபோன உணவு, காரம், உப்பு நிறைந்த, புளிப்பு மற்றும் வறுக்கப்பட்ட உணவுகள், முளைவிட்ட தானியங்கள், புதிய தானியங்கள், சோடியம் பை கார்பனேட் சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவு. பசியில்லாத போது அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுதல் மற்றும் நொதிக்க வைக்கப்பட்ட பானங்களைக் குடித்தல் ஆகியவை தோச காரணிகளை அதிகரிக்கிறது. இதன் காரணமாகவே இளம் வயது முதிர்வு ஏற்படுகிறது.

பகலில் தூங்குதல், முறையற்ற அல்லது அதிகப்படியான உடற்பயிற்சி, உடல் மற்றும் மனரீதியாக மன அழுத்தம், கோபப்படுதல் ஆகியவை தோசக் காரணிகளை அதிகரிக்கிறது. இதன் காரணமாக இளம்வயது முதிர்வு ஏற்படுகிறது.

இளம் பெண்கள் தங்கள் மேனியழகைப் பாதுகாக்க என்னென்ன வழிகளில் முயற்சிக்கலாம் என்ற ஆலோசனையை ஆயுஷ் ஆயுர்வேதிக் அறிவியல் மையத்தின் மருத்துவ வல்லுநர் இங்கே வழங்குகிறார். குறிப்பாக நரை வராமல் தடுக்க அவர் கூறும் ஆலோசனைகளை மிக பயனுள்ளவை!

வயது முதிர்வு தோன்றுவதற்கான அறிகுறிகள்:-

  • முடி நரைத்தல் மற்றும் வரண்டுபோன முடி, முடி உதிர்தல்.
  • வாடிப்போன முகம்.
  • கண்களைச் சுற்றி கருப்பு வளையங்கள்.
  • தளர்ச்சியான தசைகள்.
  • உடலில் தேவையில்லாது கொழுப்பு சேர்தல்.
  • மூட்டு வலி.
  • முறையற்ற மாதவிடாய்.
  • நாள் முழுதும் சோம்பலாக இருத்தல்.
  • சுறுசுறுப்பின்மை.
  • அதிக இதயத் துடிப்பு மற்றும் வேகமாக மூச்சிழுப்பதன் மூலம் பிரச்னை.
  • நினைவுத்திறன் தடைப்படுதல். புரிந்துகொள்ளும் தன்மை குறைதல் மற்றும் கவனக்குறைவு ஏற்படுதல்.

தினசரி தவறாமல் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்:

அதிகாலையில் விழித்தல், குறிப்பிட்ட நேரத்தில் சிறுநீர் கழித்தல் ஆகியவற்றை ஒரு பழக்க வழக்கமாகக் கொண்டிருத்தல்.

இந்தியா போன்ற வெப்பமான நாடுகளில் சூரிய வெப்பத்தால் முகத்தில் எண்ணெய் வடிதல். அழுக்கு சேர்தல் ஆகியவை உண்டாகிறது. முகம் மிருதுத் தன்மை பெறுவதற்கு எண்ணெய் மசாஜ் செய்ய வேண்டும்.

தலை, காதுகள் மற்றும் பாதங்களில் தினகரி உயவுத் தன்மை கொண்ட எண்ணெய்களைப் பூசுவதன் மூலம் தோசக் காரணிகளை நீக்கலாம்.

எளிதில் கிடைக்கும் எள் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயைப் பூசுவதன் மூலம் நன்கு குளிர்ச்சி தன்மையைப் பெறலாம். இவை முடி கொட்டுதல் மற்றும் நரைத்தல் ஆகியவற்றைத் தடுக்கிறது.

உணவுப் பழக்க வழக்கத்தை ஒழுங்குபடுத்துதல்.

நீங்கள் உட்கொள்ளும் உணவு இனிப்பு, புளிப்பு, உப்பு, கசப்பு, காரம் மற்றும் உவர்ப்பு ஆகிய ஆறு சுவைகளைக் கொண்டு நடுநிலையுடன் இருக்க வேண்டும்.

உங்களுடைய உணவில் கோதுமை, கருப்பு கொள்ளு, தேங்காய், மனிலா கொட்டை, வெல்லம், நெய் மற்றம் பழங்கள் ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது சருமத்தில் ஈரத் தன்மை மற்றும் வழவழப்பு தன்மை மூலமாக சருமம் உலர்ந்து போதல் மற்றும் தடிமனாக மாறுவதைத் தடுக்கிறது.

பசு நெய் தசை மற்றும் சருமத்திற்கு நுண்ணூட்டமளிக்கவல்லது.

இரவில் எளிதில் ஜீரணமாகும் உணவுகளை உண்டபின் குறைந்தபட்சம் 2 மணி நேரத்திற்குப் பிறகுதான் தூங்கச் செல்ல வேண்டும்.

சருமம் ஈரத் தன்மையுடன் இருக்கப் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

எண்ணெய் மிகுந்த, காரமான, வாசனை நிறைந்த மற்றும் பழைய உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

தினசரி உடற்பயிற்சியாக ஒன்றரை மணி நேரம் வரை வேகமாக நடப்பது முக்கியம். இதனால் வியர்வை வெளியேறி நச்சுப்பொருள் நீக்கப்படுகின்றன.

குறிப்பிட்ட நேரத்தில் தூங்கச் செல்ல வேண்டும்.

பகலில் தூக்குவதன் மூலம் நள்ளிரவுக்குப் பின் தூங்கச் செல்லக் கூடாது. இதனால் கண்களுக்கு கீழ் கறுப்பு வளையம், வீக்கம் ஆகியவை உண்டாகிறது.

நல்ல உடல் நலத்திற்கு சில முக்கிய மூலிகைகளை உட்புறம் எடுத்துக் கொள்வதாலும், வெளிப்புற பயன்பாட்டின் மூலம் பலன் பெறலாம்.

ஆயுர்வேத மருத்துவத்தில் நெல்லி மூலிகை மிகுந்த பயனளிக்கும் ஒன்றாகும். இம்மூலிகை இரத்தம், எலும்புகள், தசைகள் மற்றும் உடல் உறுப்புகளில் நச்சுப் பொருள்களை நீக்கி, 3 தோசக் காரணிகளை நடுநிலையுடன் வைப்பதன் மூலம் உடல் உறுப்புகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கப்படுகிறது. எப்போதும் தூய்மையான பழங்களைச் சாப்பிடுவது நன்கு பயனளிக்கும். பழங்கள் சாப்பிடவில்லையென்றால் சர்க்கரையுடன் ஒரு மேசை கரண்டி அமலா பவுடர், நெய் சேர்த்து காலை உணவுக்கு முன்பு தினமும் சாப்பிட வேண்டும். இக் கலவைப் பொருள் பொதுவாக உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதன் காரணமாக முடி நரைத்தல் தடுக்கப்படுகிறது.

ஆயுர்வேத மருத்துவத்தில், டிரிப்லா முக்கியமான மருந்துப் பொருளாகும். மூன்று கராடி பழங்கள், பகேதா மற்றும் ஆகிய மூன்றும் சம அளவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். இதில் ஆறு வகை சுவைகளும் கலந்திருப்பதால் மது வகைகளைக் குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகளை நன்கு நீக்குவதோடு இந்த டானிக் முக்கிய உடற்கூறுகளுக்கு மிகவும் உகந்ததாகும். இது ஜீரண சக்தியை அதிகரித்து எளிதில் கழிவுப் பொருள்களை வெளியேற்றுகிறது. ஏறக்குறைய ஒரு மேசை கரண்டி டிரிப்லா பவுடருடன் நீர் சேர்த்து கூழ் போல செய்து, புதிய இரும்பு பாத்திரத்தில் ஒரு இரவு முழுதும் வைத்திருந்து மறுநாள் காலை பெரிய தம்ளரில் நீர் எடுத்துக்கொண்டு ஒரு மேசை கரண்டி தேன்சேர்த்து சிரப் போன்று குடிக்க வேண்டும். ஒரு வருடத்திற்கு தினமும் இதைக் குடித்தால் புத்துணர்ச்சி பெறுவதோடு. முடி நரைக்கும் செயல்பாட்டைத் தடை செய்யலாம். இது கண்களை சுற்றி கறுப்பு வளையம் தோன்றுவதைக் குறைக்கிறது. இக் கலவைப் பொருள் உணவிலுள்ள அனைத்து சத்துகளையும் உறிஞ்சும் தன்மையை அதிகரிப்பதால் சரமத்தை பொலிவுடன் வைத்திருக்கவும், தசைகளுக்கு வலுவும் அளிக்கிறது.

கண்களுக்கு கீழே காணப்படும் கறுப்பு வளையத்தை நீக்க, மற்றொரு சிறப்பான சிகிச்சை வழிமுறையாக சூடு செய்யாத பாலுடன் ஜாதிக்காய் பவுடர் சேர்த்து களிம்பு போல செய்து கண்களுக்கு கீழே தடவி காய்ந்தவுடன் இதைக் கழுவி விட வேண்டும். இது முகம் வறண்டு போவதையும் தடுக்கிறது.

தயிருடன் சுத்தமான மா இலைகள், நீர் மற்றும் ஹால்டி ஆகியவை சேர்த்து களிம்பாகச் செய்து முகத்தில் பூசுவதால் நிற திட்டு குறைத்தல், கறுப்பு கோடுகள், முகப்பரு தழும்பு ஆகியவற்றை நீக்குகிறது. மா இலைகள் உவர்ப்பு தன்மை கொண்டிருப்பதால் அவை முகத்திலுள்ள நுண் துளைகளைச் சுருங்கச் செய்து சருமத்தைச் சுத்தமாக வைக்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button