மருத்துவ குறிப்பு

உங்க முகம் ஹீரோயின் மாதிரி பிரகாசமா மின்னுமாம்…!தண்ணீரை நீங்க ‘இப்படி’ பயன்படுத்தினால்…

பளபளப்பான சருமத்தை பெற, நீராவி மற்றும் தண்ணீரை அதன் தூய்மையான வடிவில் பயன்படுத்தலாம். உங்கள் தோல் பராமரிப்பு வழக்கத்தின் ஒரு பகுதியாக தண்ணீர் சேர்க்கப்படலாம். ஏனெனில், இது பல சரும பிரச்சினைகளை குணப்படுத்தும் மிகவும் இயற்கையான வழியாகும். உங்கள் சருமம் பிரகாசமாக மின்னவும் பளபளப்பை பெறவும் சருமப் பராமரிப்பில் தண்ணீரைச் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பிஹெச் அளவு

உங்கள் முகத்தில் பல செயற்கை ரசாயன அழகு பொருட்கள் தடவப்படுவதால், உங்கள் சருமம் அதிக பாதிப்பை எதிர்கொள்கின்றன. நமது தோல்கள் ஏற்கனவே சரிசெய்ய முடியாத அளவுக்கு சேதமடையவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கலாம். ஏனெனில், நாம் தண்ணீர் அதிகம் குடிப்பதுதான் காரணம். தண்ணீர் குடிப்பதால் தோலின் பிஹெச் சமநிலை இயல்பு நிலைக்கு திரும்புவதை உறுதி செய்கிறது. மேலும், உங்கள் முகத்தை தண்ணீரில் கழுவுவதும் உங்கள் சருமத்திற்கு நல்லது. உங்கள் சருமத்தில் உள்ள அமில மற்றும் கார பொருட்களை சுத்தம் செய்து, சீரான ஆரோக்கியமான சருமத்தை உங்களுக்கு அளிக்கிறது.

வீங்கிய கண்கள்

வேலைப்பளுவின் அளவு மற்றும் தொழில்நுட்பம் காரணமாக நமது தூக்கச் சுழற்சிகள் சீர்குலைந்துள்ளதால், நம் கண்களுக்குக் கீழே கருவளையங்கள் தோன்றுவதும், கண்கள் வீங்கியது போல் இருப்பதும் அசாதாரணமானது அல்ல! இதை மறைப்பதற்கு அதிக மேக்கப்பைப் போடுவதற்கு பதிலாக, கைக்குட்டையில் அல்லது குளிர்ந்த நீரில் நனைத்த துணியால் உங்கள் கண்களை சுற்றியும், கண்கள் மீதும் வைப்பது நல்லது. இது உங்கள் கண்களுக்குக் கீழுள்ள சுழற்சிக்கு உதவுகிறது. மேலும் கருவளையங்களைப் போக்க உதவுகிறது.

நச்சுக்களை வெளியேற்றுகிறது

தேவையான அளவு தண்ணீர் குடிப்பது வியர்வை உட்பட பல்வேறு வழிகளில் நச்சுகளை உடலிலிருந்து வெளியேற்ற உதவுகிறது. தண்ணீர் உங்கள் தோலில் இருந்து நச்சுகளை அகற்ற மிகவும் முக்கிய பங்கை வகிக்கிறது. இதேபோல், நீராவி சருமத்தை ஆழமாக சுத்தப்படுத்த உதவுகிறது. ஏனெனில் இது சருமத்தில் உள்ள அடமான நச்சுகளை எளிதாக நீக்குகிறது. மேலும் கரும்புள்ளிகளையும் நீக்குகிறது.

சரும புத்துணர்ச்சி

ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் மாசுபாடு காரணமாக இப்போது மந்தமாகிவிட்ட உங்கள் சருமம் மீண்டும் புத்த்துணர்ச்சி பெறுவதற்கு தண்ணீர் உதவுகிறது. சருமத்தில் நீர் எவ்வளவு அதிகமாக தேங்குகிறதோ, அந்த அளவுக்கு உங்கள் சருமம் புத்துணர்ச்சியோடும் ஆரோக்கியமாகவும் இருக்க உதவும். மேலும், இது சுருக்கங்களைத் தடுக்கவும் உதவுகிறது.

தோல் தொய்வு

உடல் எடையை குறைப்பதன் விளைவாக உங்கள் தோல் தொய்வடைந்துவிடும். இது மக்களுக்கு மிகவும் சிரமமாக இருக்கும். கொலாஜனின் பெரும்பகுதியைக் கொண்டிருப்பதால், தண்ணீர் குடிப்பது கொலாஜனைத் தக்க வைத்துக் கொள்ள உதவும். எனவே, நிறைய தண்ணீர் குடிப்பது உங்கள் சருமம் ஒளிர உதவும்.

முதுமையை தடுக்கும்

இளமையான சருமத்தை தக்க வைக்க தண்ணீர் ஒரு சிறந்த மருந்து. விரைவில் வயதான சருமத்தை பெறுவதை தடுக்க தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். ஏனெனில் இது சருமத்தின் நெகிழ்வுத் தன்மையை சீராக பராமரித்து, சுருக்கம், சரும வறட்சி போன்றவற்றை தடுத்து, எப்போதும் இளமையான தோற்றத்தை தக்க வைக்கும்.

அழகான உதடுகள்

உதடுகளின் அழகைக் கெடுப்பதே வறட்சி தான். ஆகவே அத்தகைய வறட்சியை போக்க, தண்ணீர் அதிகம் பருகினாலே போதும். உங்கள் உதடுக்கு போதிய நீர்ச்சத்து கிடைத்து, வெடிப்புக்களின்றி எப்போதும் அழகாக இருக்கும்.

மென்மையான சருமம்

உடலில் நீர் பற்றாக்குறை ஏற்படும்போது, சரும வறட்சி ஏற்படலாம். சரும வறட்சி ஏற்பட்டால், சருமம் கடினமாகி மென்மையிழந்து காணப்படும். எனவே தண்ணீர் அதிகம் குடித்து வந்தால், வறட்சி நீங்கி, உங்கள் சருமம் மென்மையாக இருக்கும்.

Related posts

பித்தப்பை கற்களுக்குத் தீர்வு

nathan

ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் வெந்தயம்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… உடல் இயக்கமில்லாத பெண்களும்.. அதனால் ஏற்படும் பிரச்சனைகளும்…

nathan

உங்களுக்கு தெரியுமா ஏன் காதில் உள்ள அழுக்கை சுத்தம் செய்ய கூடாது ?

nathan

இளம் பெண்களின் கல்யாண ஆசைகள்

nathan

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் சுய பரிசோதனை

nathan

குழந்தைகள் தனியாக தூங்க ஏற்ற வயது

nathan

கேஸ் டியூபை எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்?

nathan

உங்களுக்கு தாங்க முடியாத தலைவலியை நொடியில் போக்கும் ஓர் அற்புத கை வைத்தியம்!இதை முயன்று பாருங்கள்

nathan