Other News

இலங்கை சிறுவனின் உலக சாதனை!குவியும் பாராட்டுக்கள்(Photo)

கேகாலை, தல்கஸ்பிடிய என்ற பகுதியைச் சேர்ந்த இரண்டரை வயதான நுஹான் நுஸ்கி எனும் சிறுவன் 19 வினாடிகளில் அனைத்து அரபு நாடுகளின் கொடிகளையும், பெயர்களையும் அடையாளம் கண்டு சர்வதேச சாதனை புத்தகத்தில்தனது பெயரை பதிவு செய்து உலக சாதனை படைத்து தனது பொற்றோர்களுக்கும், நாட்டுக்கும், பெருமை சேர்த்துள்ளார்.

அரபு நாடுகளின் கொடிகளையும், பெயர்களையும் அடையாளம் காணும் முதலாவது சிறுவன் எனும் உலக அந்தஸ்தை அச்சிறுவன் தனதாக்கிகொண்டார்.

இரு வயதில் சாதனை
இரண்டரை வயதுடைய இலங்கை சிறுவனின் உலக சாதனை! குவியும் பாராட்டுக்கள்(Photo)

ஏற்கனவே இதே சாதனையை நிகழ்த்தி ஆசிய சாதனை புத்தகத்தில் தன் பெயரை பதிவு செய்த இச் சிறுவன் அண்மையில் உலக சாதனைக்கு விண்ணப்பித்ததுடன் இவரது திறமையை பரிசீலனை செய்து உலக சாதனை சிறுவனாக இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது.

தற்போது இவருக்கான பரிசில்கள், பதக்கங்கள் என்பன வீடு வந்து சேர்ந்துள்ளன.

முஹம்மட் நுஸ்கி, பாத்திமா ரஸீனா ஆகிய தம்பதிகளின் செல்வப் புதல்வனான இச்சிறுவன் இரண்டு வயதில் இந்த சாதனையை நிகழ்த்தி இருப்பது விசேட அம்சமாகும்.

மேலும் இந்த குழந்தை சென்ற வருடம் எ.எம்.ஆர் டோக் அமையத்தின் மூலம் சிறந்த தேர்ச்சி மிக்க குழந்தை என தேசிய அளவில் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் இந்த சிறுவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Related posts

ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ரோஷினி! புடவைய இப்படியும் கட்டலாமா?

nathan

கோடிக்கணக்கில் கையில் பணம்! எலுமிச்சை பழத்தால் இளம்பெண்ணிற்கு அடித்த அதிர்ஷ்டம்

nathan

பெங்களூருவில் நடிகை கண்முன்னே 6 வயது மகள் சாவு..!

nathan

கட்டாயப்படுத்தி நிர்வாணமாக நடிக்க வைத்தார்களா? வெளிவந்த ரகசியம்!

nathan

மீண்டும் திருமணம் செய்ய விரும்பும் கேட்ஸ்

nathan

உறைபனியில் கனடாவில் உயிரிழந்த குடும்பம்! வெளிவந்த தகவல்

nathan

அடேங்கப்பா! கொள்ளை அழகுடன் குழந்தையை கொஞ்சிய சினேகா! குட்டி தேவதையை அள்ளி அனைத்த பிரசன்னா : தீயாய் பரவும் காட்சி!

nathan

திருமணத்தால் அடுத்த சர்ச்சையில் சிக்கிய நயன் – மனித உரிமைகள் ஆணையத்தில் புகார்

nathan

பாக்கியலக்ஷ்மி சீரியலில் நடித்து வரும் நடிகர் ஜெய் சங்கர் மகன்! வெளிவந்த தகவல் !

nathan