1358416507 Preparing ayurvedic herbs
முகப் பராமரிப்பு

முகப்பொலிவை கூட்டும் சந்தனம்

பெண்கள் தங்கள் சருமத்தின் அழகைப் பராமரிப்பதற்கு பல கீரிம்களை உபயோகிப்பதால் தோல் வரண்டு, அலர்ஜி போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இயற்கை பொருள்களை வைத்து செய்யப்படும் மருத்துவம் நல்ல தீர்வை தந்திருக்கிறது. மேலும் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை எளிதில் நீக்க வல்லது.

தக்காளி:

சந்தனப் பொடியில் தக்காளியை அரைத்து கலந்து, வேண்டுமெனில் சிறிது முல்தானி மெட்டியையும் சேர்த்து கலந்து, முகத்திற்கு ஃபேஸ் பேக் போடலாம்.

எலுமிச்சை சாறு:

எலுமிச்சை சாற்றுடன் சந்தனப் பொடியை சேர்த்து கலந்து, முகத்திற்கு ஃபேஸ் மாஸ்க் போட்டால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்குவதோடு, பருக்கள் வராமலும் இருக்கும்.

தயிர்:

தயிர் ஒரு சிறந்த கிளின்சர் என்று சொல்லலாம். எனவே அந்த தயிரை சந்தனப் பொடியில் சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால், சருமம் மென்மையாவதோடு, வெள்ளையாகும்.

முட்டை மற்றும் தேன்:

மற்றொரு சந்தன ஃபேஸ் பேக் தான் இது. இதற்கு முட்டையை நன்கு அடித்து, தேன் மற்றும் சந்தனப் பொடியை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கி, அழுக்குகள் அனைத்தும் வெளியேறி, சருமம் அழகாக இளமையுடன் காணப்படும்.

மஞ்சள் தூள்:

சந்தனப் பொடியை மஞ்சள் தூள், ஒரு துளி எலுமிச்சை சாறு மற்றும் பால் ஊற்றி கலந்து, சருமத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் முகமானது பொலிவோடு காணப்படும்.

முல்தானி மெட்டி:

சந்தனப் பொடியை முல்தானி மெட்டி பவுடருடனும் சேர்த்து ஃபேஸ் பேக் போடலாம். அதற்கு 1/2 டீஸ்பூன் முல்தானி மெட்டி மற்றும் 1/2 டீஸ்பூன் சந்தனப் பொடியை சேர்த்து, தயிர் ஊற்றி கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

ரோஸ் வாட்டர்:

பொதுவாக சந்தன ஃபேஸ் பேக்கில், சந்தனப் பொடியை ரோஸ் வாட்டரில் கலந்து, சருமத்திற்கு தடவி ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் நீங்கி, சருமம் பொலிவோடு காணப்படும்.
1358416507 Preparing ayurvedic herbs

Related posts

பழக்கூழை தினமும் முகத்தில் பூசிக்கொள்ளலாம். சருமத்திற்கு நிறமும், மினிமினுப்பும் கிடைக்கும்

nathan

சரும வறட்சியை போக்கும் பேஸ் மாஸ்க்

nathan

ஏன் கருப்பு நிறம் அழகு தெரியுமா? இதப் படிங்க!!

nathan

சுப்ரர் டிப்ஸ்! சருமத்தின் பளபளப்பை அதிகரிக்க செய்யும் “ஆப்பிள்”

nathan

உங்கள் முகத்துக்கு ஏற்ற ஃபேஸ் பேக்கை நாங்க சொல்றம்…!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…சருமத்தில் வளரும் தேவையற்ற முடிகளை போக்க சில அசத்தலான வழிகள்!!!

nathan

புத்துணர்ச்சி தரும் வெள்ளரி ஃபேஸ் பேக்

nathan

முகத்தில் வரும் பருக்களை 1 மாதத்தில் போக்க வீட்டு வைத்தியம்

nathan

பேஷியல் டிப்ஸ்

nathan