இளமையாக இருக்க

முதுமை தோற்றத்தை போக்கி சருமத்தை பொலிவடைய செய்யும் தேன் ஃபேஸ் பேக்

தேனைக் கொண்டு அடிக்கடி சருமத்திற்கு ஃபேஸ் பேக் போட்டு வந்தால், நாம் சந்திக்கும் சரும பிரச்சனைகளான சுருக்கங்கள்,

முதுமைக் கோடுகள், முகப்பரு, கரும்புள்ளிகள், சரும வறட்சி போன்றவற்றைத் தடுக்கலாம்.

* 1 டீஸ்பூன் தேனில் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின்

வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்வதால், சருமம் புத்துணர்ச்சியுடனும், பொலிவோடும் மின்னும்.

* 1 டேபிள் ஸ்பூன் தேனை 1 டேபிள் ஸ்பூன் தயிருடன் கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில்

கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் மாஸ்க் முகப்பரு, எண்ணெய் பசை சருமம் கொண்டவர்களுக்கு சிறந்தது.

* நன்கு கனிந்த பப்பாளியை மசித்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து, முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்து 15 நிமிடம்

ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் சரும வறட்சி நீக்கப்பட்டு, முதுமைக் கோடுகள் தெரிவது தடுக்கப்படும்.

* 1 டேபிள் ஸ்பூன் தேனில் 1 டேபிள் ஸ்பூன் கல் உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் முகத்தை நீரில் கழுவி, பின் அந்த

கலவையைக் கொண்டு சருமத்தை வட்ட சுழற்சியில் ஸ்கரப் செய்து 10 நிமிடம் ஊற வைத்து கழுவி, பின் மாய்ஸ்சுரைசர் தடவ,

சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளைப் புள்ளிகள் அகற்றப்படும்.

* பிரகாசமான சருமத்தைப் பெற நினைத்தால், 1 டேபிள் ஸ்பூன் தேனில் சிறிது நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்து சேர்த்து, 20

நிமிடம் மென்மையாக மசாஜ் செய்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை 5 நாட்கள் தொடர்ந்து செய்து வர,

நல்ல மாற்றம் தெரியும்.

3242e2df f81e 4636 b7df 3f93461ce6cf S secvpf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button