இளமையாக இருக்க

முதுமையை தடுக்கும் ஆலிவ் ஆயில்

ஆலிவ் எண்ணெயில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் நேச்சுரல் ஃபேட்டி ஆசிட்டுகள் அடங்கியுள்ளன. இந்த எண்ணெய்

அனைத்து வகையான சருமத்தினருக்கும் ஏற்ற ஒன்று. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பொருள் ஏராளமாக இருப்பதால் தான், இது சரும

பராமரிப்பிற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இத்தகைய ஆலிவ் ஆயிலை தினமும் இரவில் படுக்கும் முன், முகத்தில் தடவி நன்கு

மசாஜ் செய்து, மறுநாள் காலையில் முகத்தைக் கழுவினால், ஏராளமான நன்மைகளைப் பெறலாம்.

* ஆலிவ் ஆயிலில் சருமத்தின் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின் ஈ மற்றும் ஏ ஏராளமாக நிறைந்துள்ளது. எனவே தினமும்

இரவில் ஆலிவ் ஆயில் கொண்டு முகத்தை மசாஜ் செய்து வந்தால், பாதிக்கப்பட்ட சரும செல்கள் புதுப்பிக்கப்பட்டு, முகம்

புத்துணர்ச்சியுடன் அழகாக காணப்படும்.

* முகத்தில் ஏதேனும் தழும்புகள் இருந்தால் தினமும் இரவில் ஆலிவ் ஆயிலைக் கொண்டு மசாஜ் செய்து வாருங்கள். இதனால்

அவ்விடத்தில் புதிய செல்கள் புதுப்பிக்கப்பட்டு, சருமத்தின் நெகிழ்வுத்தன்மை அதிகரிக்கும். மேலும் இச்செயல் மூலம் நாளடைவில்

தழும்புகளும் மறையும்.

* தினமும் ஆலிவ் ஆயில் கொண்டு மசாஜ் செய்வதன் மூலம், அதில் உள்ள வைட்டமின் ஈ, சரும செல்கள் சீரழிவடைவதைத் தடுத்து,

சருமம் விரைவில் முதுமைத் தோற்றம் அடைவதைத் தடுக்கும். மேலும் ஆலிவ் ஆயிலில் உள்ள ஸ்குவாலின் அமிலம், சருமத்தின்

நெகிழ்வுத்தன்மையை அதிகரித்து, சருமம் தளர்வதைத் தடுத்து, இளமையுடன் வைத்துக் கொள்ள உதவும்.

* உங்களுக்கு மிகுந்த வறட்சியான சருமம் என்றால், ஆலிவ் ஆயிலைக் கொண்டு தினமும் இரவில் சருமத்தை மசாஜ் செய்து

வாருங்கள். இப்படி தினமும் செய்வதன் மூலம், சரும வறட்சி ஏற்படுவதைத் தடுக்கலாம்.

7adba7c3 257d 49b9 baa9 77877b25cadf S secvpf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button