பொதுவானகைவினை

பீட்ஸ் ஜுவல்லரி

தங்கத்தைப் போலவும், வெள்ளியைப் போலவும் தோற்றம் தரும் போலி உலோகங்கள் இன்று எவ்வளவோ வந்துவிட்டன. தங்கமோ, வெள்ளியோ இல்லை என சத்தியம் செய்தால்கூட நம்ப முடியாத அளவுக்கு அவற்றில் எல்லா டிசைன்களிலும் இன்று நகைகள் வருகின்றன. தங்கம் மற்றும் வெள்ளி ஃபினிஷிங்கில் உள்ள நகைகளை குறிப்பிட்ட சில உடைகளுக்குத்தான் அணிய முடியும். மாடர்ன் டிரெஸ்ஸுக்கு பீட்ஸ் எனப்படுகிற கலர் கலர் மணிகளில் செய்யப்படுகிற நகைகள்தான் பொருத்தம். பீட்ஸ் ஜுவல்லரியை புடவை, சல்வார் போன்ற பாரம்பரிய உடைகளுடனும் அணியலாம். விதம் விதமான பீட்ஸ் நகைகள் செய்வதில் நிபுணியாக இருக்கிறார் சென்னையைச் சேர்ந்த மோகனா.

நகை வடிவமைப்புக் கலைஞர்ங்கிறதுதான் என்னோட அடையாளம். பேப்பர் நகைகள், குவில்லிங் நகைகள், ஜிப்சி நகைகள்னு எல்லாமே செய்வேன். இன்னிக்கு தங்கம் விற்கற விலையில ஃபேஷன் நகைகள் எல்லாத்துக்குமே பெண்கள் மத்தியில நல்ல வரவேற்பு இருக்கு. எல்லாரும் தங்கத்தைப் போலவும் வெள்ளியைப் போலவும் நகைகள் போட விரும்பறதில்லை. இளம் பெண்களும் சிம்பிளா காட்சியளிக்கணும்னு நினைக்கிறவங்களும் பீட்ஸ் வச்ச நகைகளைத் தான் விரும்பறாங்க.

அதனால அதுல நிறைய புதுப்புது டிசைன்ஸை உருவாக்கி, ஸ்பெஷலைஸ் பண்றேன்…” என்கிற மோகனா, பீட்ஸ் ஜுவல்லரியில் வளையல், பிரேஸ்லெட், நெத்திச்சூடி, ஆரம், கொலுசு, காதணி, கழுத்தணி உள்பட, கல்யாணத்துக்கான முழு செட்டுமே செய்யலாம் என்கிறார்.

5 ஆயிரம் ரூபாய் முதலீடு இருந்தா போதும். சாதாரண மணிகள்லேருந்து, கிறிஸ்டல், முத்து, அமெரிக்கன் டயமண்ட்ஸ் வரை எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் வாங்கி பிசினஸை ஆரம்பிக்கலாம். ஒரு ஜோடி கம்மலை 10 ரூபாய்லேருந்து விற்கலாம். கல்யாணத்துக்கான செட் 3 ஆயிரம் வரைக்கும் போகும். இதுல இன்னொரு சிறப்பு என்னன்னா, டிரெஸ்ஸுக்கு மேட்ச்சா, அதே கலர்ல நகைகள் பண்ண முடியும். எத்தனை டிரெஸ் இருக்கோ, அத்தனைக்கும் பிரத்யேக ஒவ்வொரு செட் நகைகளை போட்டுக்கிட்டுக் கலக்கலாம். ஒவ்வொரு முறையும் புதுசா தெரிவீங்க…” என்கிற மோகனாவிடம், 2 நாள் பயிற்சியில் பீட்ஸ் ஜுவல்லரி கற்றுக் கொள்ள, மெட்டீரியலுடன் சேர்த்துக் கட்டணம் 1,500 ரூபாய்.

ld3907

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button